.

Sunday, March 24, 2013

 கடலூர் GM(O) கிளைத் தோழர். G. அசோகன், SSS, அவர்களது   பணிஓய்வு பாரட்டுவிழா

     மாவட்ட அலுவலக் கிளையிலன் தோழர். G. அசோகன், SSS – TRA CDL
அவர்களின் பணிஓய்வு பாரட்டு விழா,  18.03.2013 மாலை 5.30 மணிக்கு துவங்கியது.  தோழியர். K. விஜயலட்சுமி, வரவேற்க,  மாவட்ட செயலர் தோழர். ஸ்ரீதர் துவக்கவுரை  நிகழ்த்தினார். மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளையின் மூத்த தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர். மாநில அமைப்புச் செயலர். தோழர். N. அன்பழகன், தனது வாழ்த்துரையில் 6வது சரிபார்ப்புத் தேர்தலில் நமது கடமையை நினைவூட்டி, நம்பூதிரி சங்கத்தின் ஏமாற்று வேலைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். குடந்தை ஜெயபால், தனது சிறப்புரையில் தோழர். அசோகனுடன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். தோழர். அசோகன், தனது சங்க அனுபவங்களை நினைவு கூர்ந்து ஏற்புரை ஆற்றினார். கிளைக்கு ரூ.1000/-மும், மாவட்ட சங்கத்திற்க்கு ரூ.500/- நன்கொடை அளித்தார். தோழர். S. ரஜேந்திரன், கிளை அமைப்புச்செயலர் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது. தோழர் அசோகன் அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் நன்றி.


No comments:

Post a Comment