.

Thursday, April 18, 2013

நாம் அங்கீகாரம் பெறுகிறோம்.


நடந்து முடிந்த ஆறாவது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில், எந்த ஒரு சங்கமும் ஐம்பது சதத்திற்கு மேலாக ஓட்டுக்களைப் பெறவில்லை. எனவே புதிய அங்கீகார விதிகளின் படி (Click Here to read the New Recognition Rules)இரண்டு சங்கங்களுமே சமஅந்தஸ்த்துடன்  அங்கிகரிக்கப் பட வேண்டும்.

நாம் அனைத்து சர்க்கிள்களிலும் அங்கிகரிக்கப்பட இருக்கிறோம் என்பது மட்டுமல்ல, தோழர்களே, அனைத்து மட்டத்திலும் அருவாக்கப்படும் கவுன்ஸில்களிலும் பெற்ற ஓட்டுக்களின் அடிப்படையில் (விகிதாச்சார முறையில்) கவுன்சில் உறுப்பினர்கள் அமையும்.  இத்தேர்தலில், BSNLEU 99,380 வாக்குகளும் NFTE BSNL சங்கம்- 61,915 வாக்குகளும் பெற்றுள்ளன. எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு புதிய அங்கீகார விதிகளின்  அடிப்படையில் இரண்டு சங்கங்களும் அங்கீகாரம் பெற்றவைகளாக செயல்படும். 

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நமது NFTE சங்கத்திற்கு JCM கூட்டு ஆலோசனைக் குழுவில் ஊழியர் பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி! 

 JCM கூட்டு ஆலோசனைக் குழுவில் நமக்கு 5 இடங்களும் BSNLEU விற்கு 9 இடங்களும் கிடைக்கக் கூடும். நமது சங்கக்த்திளிருந்து JCM தலைவரும்  BSNLEU-விலிருந்து  செயலரும்  இருப்பர்.

இந்த வெற்றிக்கு உழைத்திட்ட அனைத்து தோழர்கள்/ தோழியர்கள், தோழமைச் சங்க தோழர்கள் ஆகியோருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி! நமது மாவட்டத்தில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட அனைத்துத் தலைவர்களுக்கும் நமது நன்றியினை சார்ப்பிக்கிறோம்.

நமது கடமையும் பொறுப்பும் பெரிது என்பதை உணர்ந்து நமது செயல்பாட்டை தொடர உறுதிஏற்போம். 

அகில இந்திய முடிவுகளைத் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும். 

Chief returning Officers letter - Click Here




No comments:

Post a Comment