.

Wednesday, April 10, 2013


கவிழ்ந்தது போதும்.. 

கவிழ்த்து விடு..


எண்ணெய்  நிறுவன ஊழியர்கள் 
என்னைப்பார் என 
எழுந்து  நிற்கின்றார்கள் 

நிலக்கரி இந்தியா 
நிமிர்ந்து நிற்கின்றது 

தூக்கி விடுகின்றான் காலரை 
துறைமுகத் தொழிலாளி 

அடுத்த ஊதியப்பேச்சு வார்த்தை 
ஆரம்பமாகிவிட்டது.. 
வங்கியிலே பொங்குது.. மகிழ்ச்சி.. 

ஐம்பது சத கிராக்கிப்படியை 
அடிப்படைச் சம்பளத்தோடு 
இணைக்கக்கோரி 
கோரிக்கைச்  சத்தம் 
தடதடக்குது  ரயில்வேயிலே ..

ஏழாவது  ஊதியக்குழுவை 
எப்படியும்  2016ல் முடிக்க வேண்டும் என 
மார் தட்டி நிற்கின்றனர் மத்திய அரசு ஊழியர்கள் 

ஆனால்  BSNLலில் 

தாழ்ந்த நிலையில்..
தலை கவிழ்ந்து நிற்கின்றோம்..
தானென்ற அகம்பாவம்  தலைதூக்கியதால்..
அங்கீகாரம்...  அகங்காரமாக.. 
ஆட்டம்  போட்டதினால் 
தட்டிக்கேட்கும் திராணியை 
தவற விட்டதினால் 

78.2 ஐக்கூட  இன்னும் பெற முடியாமல் 
தலை கவிழ்ந்து  நிற்கின்றோம் 

தலை நிமிர்ந்து நின்ற தோழனே!
தலை நிமிர்த்து.. 
இணைந்த கரம் உயர்த்து ..

உன் தலை கவிழக் 
காரணமானவர்களின் 
கனமேறிய தலையைக்
கவிழ்த்து விடு..
ஏப்ரல்  16ல்...  
                                                                                                                             நன்றி: காரைக்குடி 

No comments:

Post a Comment