.

Wednesday, July 3, 2013

தீயா.. வேலை.. செய்யணும்..

தோழர்களே..
இது ஜூலை மாதம்.. 
புது உறுப்பினர்களை சேர்க்கும் மாதம்.
ஜூலை 15க்குள் புது உறுப்பினர்களின் பட்டியலை
நிர்வாகத்திடம் நாம் அளித்திட  வேண்டும்.

அதற்கு முன்..
கடந்த தேர்தல் முடிவுகளை சற்று அலசிட வேண்டும்.
மற்றைய தேர்தல்களை விட இந்த தேர்தலில் நமது வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்பதை மனதில் இருத்த வேண்டும்.
100 சத குறைபாடுகள் இருந்தாலும்  BSNLEU சங்கம் 
50 சத உறுப்பினர் எண்ணிக்கையை தொட்டுக்கொண்டிருக்கின்றது  
என்ற உண்மையை நாம் மறந்திடல் ஆகாது.
எட்டாண்டுகளுக்குப் பின் இரண்டாவது சங்க அங்கீகாரம் நமக்கு கிட்டியுள்ளது . இந்த 3 ஆண்டுகளில் மிக மிக கடுமையாக நாம் உழைக்க வேண்டும். பெரும்பகுதி ஊழியரின் ஆதரவைப் பெற்று 
முதற்சங்கம் என்னும் நிலையை மீண்டும் அடைய வேண்டும்.
இல்லையேல்,  BSNLEU சங்கம் 50 சதம் அடைந்து 
ஒரு சங்க தொழிற்சங்க முறை மீண்டும் தலையெடுக்கும்..

எனவே தோழர்களே..
கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்துவோம்.
உள்குத்து,வெளிக்குத்து விவகாரங்களைக்  களைந்தெறிவோம்..
மாண்புமிக்க NFTE சங்கத்தை மீண்டும் முதன்மைச்சங்கமாக்கிட 
தீயவற்றை ஒதுக்கிடுவோம்..
தீயா வேலை செய்திடுவோம்..

=நன்றி:காரைக்குடி வலைத்தளம் 

2 comments:

  1. When you copy a news from other websites, give credit to them. Dont give an impression that you wrote it. You are a borrower.

    ReplyDelete