.

Tuesday, September 17, 2013

FACT FINDING COMMITTEE -விசாரணை 14-09-2013

              வேலூர் மாநில செயற்குழு முடிவின்படி அமைக்கப்பட்ட மாநில துணை தலைவர் M லட்சம் தலைமையில் தோழர்கள் விஜயரங்கன் , P சென்னகேசவன் , K அசோகராஜன், P காமராஜ்   ஆகியோரை கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் (FACT FINDING COMMITTEE ) விசாரணை 14-09-2013 அன்று கடலூரில் நடைபெற்றது.  
 சம்பந்தப்பட்டவர்களுக்கு  முறையான சம்மன் முன்கூட்டியே அனுப்பப்பட்டு  விசாரணை(second sitting ) நடைபெற்றது .
         
        காலையில் நமது மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் COMMITTEE முன்பு ஆஜரானார்.கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் அமைப்பு விதிமீறலுக்கும் உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் உறுப்பினர் எண்ணிகையை விட குறைவான ஓட்டுகளை பெற்றதற்கும் சம்மேளன செயலாளரே காரணம் என்று தான் வேலூர் செயற்குழுவில் பதிவு செய்திருந்த குற்றச்சாட்டுகளை மீண்டும் தக்க ஆதாரங்களோடு COMMITTEE முன்பு சமர்ப்பித்தார்.
        
         மாலையில் சம்மேளன செயலர் G ஜெயராமன் COMMITTEE  முன்பு ஆஜரானார்.
          
         முறையான சம்மன் முன்கூட்டியே அனுப்பப்பட்டும் முன்னாள் மாவட்ட செயலர் P சுந்தரமூர்த்தியும் முன்னாள் மாவட்ட பொருளர் M மஞ்சினியும் COMMITTEE முன்பு ஆஜராகவில்லை .

     "ண்மை , தூய்மை , சுயநலமின்மை ஆகிய இந்த மூன்றை பெற்றிருப்பவர்களைக் கெடுக்கக்கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ, மண்ணுலகிலோ எங்குமே கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும்,அதை எதிர்க்கக்கூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு "
                                                                                                        -சுவாமி விவேகானந்தர் 


No comments:

Post a Comment