.

Sunday, October 6, 2013

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 09-10-2013

NFTE- BSNL 
கடலூர் மாவட்டம் 
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 09-10-2013

குஜராத் மாநிலம் ஜுனகத் நகரில் நடைபெற்ற நமது மத்திய செயற்குழுவில் கீழ்க்கண்ட கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது .  செயற்குழு முடிவின் படி 09-10-2013 அன்று அனைத்துக் கிளைகளிலும் முதற்கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்திட மாவட்ட சங்கம் கேட்டுகொள்கிறது.  மத்திய , மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகள் உண்ணாவிரதம், அனைத்து சங்கங்களை கலந்து வேலை நிறுத்தம் முடிவு செய்யப்படும். அனைவரும் கலந்து கொண்டு வெற்றிகரமாக்குவோம் .
கோரிக்கைகள் 
#புதிய போனஸ் கணக்கீடு உருவாக்கப்பட வேண்டும். 

#இந்த ஆண்டு குறைந்த பட்ச போனசாவது வழங்கப்பட வேண்டும்.

#STAGNATION - தேக்க நிலை அகற்றப்பட வேண்டும்.

#LTC மற்றும் மருத்துவப்படிகளை மறுபடியும் வழங்க வேண்டும்.

#01/01/2007க்குப்பின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்க வேண்டும். HRA 78.2 சத அடிப்படையிலேயே  வழங்க வேண்டும். 01/01/2007ல் இருந்து 78.2க்கான நிலுவை வழங்க வேண்டும்..

#பிரதி மாதம் 12க்குள் GPF பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.

#கருணை அடிப்படை வேலைக்கான 55 மதிப்பெண் முறை அகற்றப்பட வேண்டும். விரைந்து பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.

#JAO/JTO/TTA/கேடர்களில் ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் வேண்டும்.

#JTO ஆக OFFICIATING  செய்யும் TTAக்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்..

#மத்திய அரசு ஊழியருக்கு இணையான படிகள் 
ALLOWANCES வழங்கப்பட வேண்டும்..

#TELECOM FACTORY பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

#நாலுகட்ட பதவி உயர்வின் நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.

#SC/ST தோழர்களுக்கான  சலுகைகள் வழங்கப்பட வேண்டும். 

#NE-12 சம்பள விகிதத்திற்கு செல்லும் தோழர்களுக்கு 8 ஆண்டு கால சேவை நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.


கோரிக்கைகளை வென்றடுப்போம் 
தோழமையுடன் 
ரா. செல்வம்                                                                                              இரா ஸ்ரீதர் 
மாவட்ட தலைவர்                                                                        மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment