தமிழ் மாநில செயற்குழு கிருஷ்ணகிரியில் 20-11-2013 அன்று மாநில தலைவர் நூருல்லா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தருமபுரி மாவட்ட செயலர் மணி மற்றும் வேலூர் சென்னகேசவன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர் . நமது மாவட்டத்தை சேர்ந்த மாநில துணைத்தலைவர் லோகநாதன் அஞ்சலியுரையாற்றினார் .ஆய்படுபொருள்களை அறிமுகப்படுத்தி மாநில செயலர் பட்டாபி அறிமுக உரையாற்றினார்.மாநில சங்க நிர்வாகிகளும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் விவாதங்களில் பங்கேற்று உரையாற்றினர். சம்மேளன செயலர் G ஜெயராமன்,அகில இந்திய அமைப்பு செயலர் SS கோபாலகிருஷ்ணன்,மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்கள் குடந்தை ஜெயபால், மதுரை சேது,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தமிழ்மணி ,இளைஞர் கன்வீனர் சுபேதார் அலிகான்,மகளிர் கன்வீனர் லைலா பானு,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் மாநில செயலர் பட்டாபி விவாதங்களுக்கு பதிலளித்து கருத்துரையாற்றினார். சிறிய மாவட்டமாக இருந்தாலும் செயற்குழு ஏற்பாட்டை செம்மையாக செய்திட்ட தருமபுரி மாவட்ட செயலர் மணி மற்றும் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் முனியன் ஆகியோரையும் மற்ற தோழர்களையும் பாராட்டுகிறோம்
செயற்குழு காட்சிகள் இங்கே
ஒலிக்கதிர் பொன்விழா நிதியினை நிறைவாக வழங்கிய சிவில் , குடந்தை,காரைக்குடி,மதுரை,குன்னூர்,வேலூர் மாவட்ட சங்கங்களுக்கும் மகளிர் கன்வீனர் லைலா பானு-தஞ்சை,மாநில துணை தலைவர் மனோகரன்-திருச்சி , ராபர்ட்-கோவை ஆகிய தோழர்களுக்கும் நன்றி.மற்ற மாவட்ட சங்கங்களும் நிர்ணயிக்கப்பட்ட நிதியினை விரைவில் வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
மொத்தத்தில்,மாநில செயற்குழு கிருஷ்ணகிரி ஒற்றுமை பாதைக்கான வழிகாட்டிருக்கிறது. நமது கடலூர் மாவட்ட அமைப்பு மற்றும் நிதி பிரச்சினையும் விரைவில் தீர்வடையும் என்று நம்புகிறோம் .

No comments:
Post a Comment