.

Wednesday, December 11, 2013

கடலூர் மாவட்ட செயற்குழு 10-12-2013

 கடலூர் மாவட்ட செயற்குழு 10-12-2013 அன்று அறிவித்தபடி சரியாக

மதியம் 02-30மணிக்கு தோழர் R.செல்வம் மாவட்ட தலைவர்

 உரையுடன் துவங்கியது கூட்டத்தில் 60 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் 

கலந்து கொண்டனர்.

தோழியர் கீதா மாவட்ட துணை தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார். 

தோழர் G.ரங்கராஜன் மாவட்ட அமைப்பு செயலர் 

அஞ்சலியுரையற்றினார். 

   அதனை தொடர்ந்து குடந்தை தோழர் R.ஜெயபால் மாநில சிறப்பு 

அழைப்பாளர் துவக்கவுரையாற்றினார்கள் அவர் உரையில் மதுரை

 மாநில மாநாடு,வேலூர் மாநில செயற்குழு,கிருஷ்ணகிரி மாநில 

செயற்குழு மற்றும் கடலூர் மாவட்ட மாநாடு நிகழ்வுகளை 

பகிர்ந்துக்கொண்டார். ஒலிக்கதிர் சிறப்பு பற்றியும் அதன் பொன்விழா 

பற்றியும் விரிவாக விளக்கினார். அதனை தொடர்ந்து தோழர் 

இரா.ஸ்ரீதர் மாவட்ட செயலர் ஜன-06-2014 அன்று நடைபெறும் 

ஒலிக்கதிர் பொன்விழா நிகழ்வுக்கான பொறுப்பாளர்களை நியமனம் 

செய்து அவர்களுக்கான பணிகளை பற்றி விளக்கினார். 

பொறுப்பாளர்கள் விபரம் விரைவில் வெளியிடப்படும். 

சம்மேளன செயலர் தோழர் G.ஜெயராமன் சொந்த வேலை இருப்பதால் 

செயற்குழுவில் கலந்துக்கொள்ள முடியவில்லை என 

தொலைபேசியில் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற 

பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 10-12-2013 அன்று 

நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கபடுகிறது என 

செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. 



No comments:

Post a Comment