அகில இந்திய JCM 23/12/2013 அன்று டெல்லியில் கூடுகின்றது.
முதன் முறையாக தேசியக்கூட்டாலோசனைக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நமது மாநிலச்செயலர்
தோழர். பட்டாபி
அவர்களை வாழ்த்துகிறோம் .
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன.
ஊழியர் தரப்பில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள்
- RM, GRD பதவிகளில் STAGNATION தேக்க நிலை தீர்த்தல்
- அனைவருக்கும் போனஸ் வழங்குதல்
- 78.2 சத IDA இணைப்பு நிலுவை வழங்குதல்.
- ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குதல்.
- 78.2 சத IDA இணைப்புக்கேற்ப அனைத்துப்படிகளும் வழங்குதல்.
- நான்கு கட்டப்பதவி உயர்வை முறைப்படுத்துதல்.
- SC/ST தோழர்களுக்கு இலாக்காத்தேர்வுக்கான தகுதி மதிப்பெண்களை தளர்த்துதல்.
- LTC,மருத்துவப்படி மற்றும் LTCயில் விடுப்பை காசாக்கும் வசதிகளை அமுல்படுத்துதல்.
- BSNLலில் பணி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வகுத்தல்.
- TM பயிற்சி முடித்து பதவி இல்லாததால் காத்திருப்போருக்கு பதவி உயர்வு வழங்குதல்.
நிர்வாகத்தரப்பில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகள்
- மாநில,மாவட்ட மட்ட JCM குழு உருவாக்கத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்த்தல்.
- JCM மாநில, மாவட்டக்குழு எண்ணிக்கையை முறைப்படுத்துதல்.
- கருணை அடிப்படை வேலைக்குப்பதிலாக புதிய இழப்பீட்டு முறை உருவாக்குதல்.
- BSNL நிறுவனத்தின் பணிக்கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்துதல்.
No comments:
Post a Comment