.

Friday, January 24, 2014

சேம நல செய்தி

மாநில சேம நல குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கடலூர் மாவட்டத்தில் திருமண கடன் ரூ 50000 ஆகவும், பணி ஓய்வு GIFT CHEQUE ரூ 2000 ஆகவும் உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது 
உணவின் சுவை உண்பதில் இருக்கு...
"கத்துகடல் சூழ்நாகை காத்தான்தன் சத்திரத்தில் 
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்; குத்தி 
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம் 
இலையில்இட வெள்ளி எழும்"
சத்திரத்தில் அரிசி வருவதற்குள் அஸ்தமித்து விடும் . அதை குத்தி,புடைத்து, கல் நோம்பி உலையில் இடுவதற்குள் ஊரே அடங்கிப்போகும். உலை கொதித்து, சோறு வடித்து , அது ஆறி பரிமாறுவதற்குள் விடிஞ்சிடும் ...
-இது பசியில் காள மேக புலவர் பாடிய பாடலின் கருத்து.

ஆக்கப்  பொறுக்கலாம் 
ஆறப் பொறுக்கலாம் 
பரிமாறவும் பொறுக்கணும்னா 
-பசி பொறுக்காதே !

Thursday, January 23, 2014

இரங்கல்

நம்முடன் பணியாற்றி ஓய்வு பெற்ற தோழியர் D மஞ்சுளா STS (Retd ) அவர்கள் 22-01-2014 அன்று இயற்கை எய்தினார்.அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை மாவட்ட சங்கம் உரித்தாக்குகிறது. 

Tuesday, January 21, 2014

லெனின்  நினைவு தினம்  ஜனவரி 21
லெனினை பற்றிய ஒலிக்கதிர் அட்டைபடம் 


லெனினை நினைவு கூற பொருத்தமான ஜனசக்தியில் வந்துள்ள செய்தி 
தோழர் ஏ பி பரதன் அவர்கள்  தனது கட்டுரை ஒன்றில் இவ்வாறு கூறுகிறார் "நமது நாடு தனது அரசியல், பொருளாதார,சமூக வாழ்வில் மிகவும் நெருக்கடியான சிக்கலான கட்டத்தில் உள்ளது.  இந்த சூழலில் தத்துவார்த்த ரீதியாக வளர்ந்த அனுபவம் மிக்க தலைவர்களை  இழந்துள்ளோம்.  பெரும் எண்ணிக்கையில் இளம் கம்யுனிஸ்ட்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.  இயக்கத்தை தலைமை தாங்கி நடத்த இது அவசியம்.  உண்மையில் அவர்கள் நம்மை சுற்றி உள்ளனர். தற்போதைய நிலையில் இளைஞர்கள் நாட்டின் அரசியல் , எதிர்காலம் பற்றி ஆர்வம் காட்டுகின்றனர் . ஏற்கனவே முற்போக்கு சிந்தனையோடு உள்ள சோஷலிசத்தின் பால் ஈர்க்கப்பட்ட அந்த இளைஞர்களை இயக்கத்திற்குள் கொண்டுவர வேண்டும் "

Saturday, January 18, 2014

ஜீவா நினைவு நாள் -இன்று


ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 211907 - ஜனவரி 181963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக,சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.
வைக்கம் சத்தியாக்கிரகம்சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர்.1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஜீவா நூற்றாண்டு பற்றி நமது ஒலிக்கதிரில் வெளியானது 

Friday, January 17, 2014

அஞ்சலி

நமது அகில இந்திய சங்கத்தின் பொருளாளர் தோழர்  P L துவா  அவர்கள் இன்று 17-1-2014 இயற்கை எய்தினார் . மறைந்த தலைவருக்கு செங்கொடி தாழ்த்தி நமது  அஞ்சலி.  

Thursday, January 16, 2014

நன்றி! நன்றி!! நன்றி!!!

ஒளி தரும் சூரியனுக்கு உணவளிக்கும் உழவருக்கு 
நன்றி சொல்லும் இந்த நன்னாளில் 
ஒலிக்கதிர் பொன்விழாவினை  பொன்னாய் ஒளிரச் செய்த 
ஒவ்வொருவருக்கும் நன்றிகள்!

நன்கொடை வழங்கிய பொது மேலாளர் , அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து நல் இதயங்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கிளைச் செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் , மாநில சங்க நிர்வாகிகள், பிற மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழமை சங்க நிர்வாகிகளுக்கும் நன்றிகள்!

உறுதுணையாய் நின்றிட்ட மாநில உதவி செயலர் தோழர் சென்னகேசவன், புதுவை காமராஜ், ஆலோசனை வழங்கிய மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் குடந்தை ஜெயபால் , மதுரை சேது , உடன் நின்று செயலாற்றிய ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தோழர் தமிழ்மணி ஆகியோருக்கும் நன்றிகள்! கடலூர் மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட தோழர்களுக்கும் மாநிலம் முழுவதிலிமிருந்து கலந்து கொண்ட 1600க்கும் மேற்பட்ட தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

விருந்தோம்பல் சிறக்க வயிறார வாழ்த்த உணவு பொருட்கள் வழங்கியோர்க்கு நன்றிகள்! 
தோழர்கள் 
P அழகிரி STS  KAC              -துவரம் பருப்பு     -35 கிலோ 
R குணசேகரன் TM NKM -இட்லி அரிசி          -75 கிலோ 
S செல்வராஜ் STS(Rtd.) TNV      -சாப்பாட்டு அரிசி -50 கிலோ 
A செல்வகுமார் TOA TNV- சாப்பாட்டு அரிசி -50 கிலோ
P ஜெயராஜ் TM NKM          -க.பருப்பு -20 கிலோ பா. பருப்பு -15 கிலோ 
T கோவிந்தசாமி TM ULD -உளுந்து -15 கிலோ 
G ஜெயச்சந்தர் TTA ESK   -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
R பாஸ்கரன் SSS PRT        -ந.எண்ணெய் -5கிலோ முந்திரி -4கிலோ 
G கணேசமூர்த்தி TM ULD  -அப்பளம் -1300
M சுந்தரராமன் TM TGRI   -தேங்காய் -80 
P கமலா TM CDL                   -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
P மணி TM CDL                     -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
P செல்வி TM CDL                -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
C ஜெயலட்சுமி STS CDL    -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
R கஸ்தூரி STS CDL             --தேங்காய் -50  
C சம்மனசு மேரி SSS CDL -சர்க்கரை 20 கிலோ 
P பிச்சைப்பிள்ளை STS CDL -டீ -3கிலோ, காபி -2கிலோ, சிக்கரி -400கிராம் 
R புருஷோத்தமன் TM CDL -வெல்லம் -15 கிலோ 
TV பாலு TM CDL                        -தயிர் 30 லிட்டர் 
N ஜெயராமன் TM CDL             - புளி  -7 கிலோ 
H ஜெகதீசன் TM CDL                 -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
V இளங்கோவன் TTA ARA      -காய்கறிகள் 
V பாலகிருஷ்ணன் TM  KTL  -வெற்றிலை பாக்கு 
P குமார் TM CDL                          -பால் -50 லிட்டர் 
R கிருஷ்ணமூர்த்தி TM CDL -பால் -50 லிட்டர்
V பெருமாள் TM CDL                 -டீ கப் -20 ரோல் 
V முத்துவேல் TM CDL           --ரவா , மைதா 
MS குமார் CL CDL                     --உப்பு -12 கிலோ 
D குழந்தைநாதன் TTA ULD -கோதுமை மாவு -15 கிலோ 
மேலும் மற்ற பொருட்கள் வழங்கியோர் 
D ரவிச்சந்திரன் TM CDM    -வாழைமரம் -10
G கணேசமூர்த்தி TM ULD  -- துண்டு -50
N ராஜாராமன் SSS CDL           -காபி பிளாஸ்க் 
PL செல்வன் TTA நாகர்கோயில் --ஒலிக்கதிர் சின்னம் பதித்த பலூன்கள் 

தகவல் பலகைக்கு இங்கே 







ஒலிக்கதிர் பொன்விழா சிறக்க பணியாற்றிய ஒவ்வொருவருக்கும்  நன்றிகள்!
குழுக்களும் பணியாற்றியவர்களின் விவரமும் 
1.ஒலிக்கதிர் பொன்விழா புகைப்பட கண்காட்சி 

தோழர்கள் 
S  தமிழ்மணி ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் 
D அன்புதேவன் TTA கடலூர் 
R சுப்பிரமணி TM கடலூர் 
K செல்வராஜ் STS கடலூர் 
2.உணவுக்குழு 

தோழர்கள் 
S ராஜேந்திரன் TM கடலூர் 
R மலர்வேந்தன் TM நெல்லிக்குப்பம் 
D குழந்தைநாதன் TTA உளுந்தூர்பேட்டை
G ஜெயசந்தர் TTA எலவனாசூர்கோட்டை 
V முத்துவேல் TM கடலூர் 
G கணேசமூர்த்தி TM உளுந்தூர்பேட்டை 
K ஜலதரன்  RM கடலூர் 
T பாலாஜி TM பண்ருட்டி 
K மகேஸ்வரன் TTA சிதம்பரம் 
TV பாலு TM கடலூர் 
3.விளம்பர பதாகைகள் 

தோழர்கள் 
V நீலகண்டன் SSS கடலூர் 
V லோகநாதன் STS நெய்வேலி 
R ஸ்ரீநாத் TTA நெய்வேலி 
R நந்தகுமார் TTA செஞ்சி 
4.தோரணங்கள் மற்றும் கொடிகம்பம் ஏற்பாடு குழு 

R கிருஷ்ணமூர்த்தி TM கடலூர் 
MS குமார் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர்
K ராகவன் TM கடலூர் 
N சந்திரசேகர் STS கடலூர் 
S பாஸ்கரன் TM பண்ருட்டி 
P லட்சுமணன் TM பண்ருட்டி 
M தினகரன் TTA கடலூர் 
R புருஷோத்தமன் TM கடலூர் 
R விஸ்வநாதன் RM கடலூர் 
S அண்ணாதுரை ஒப்பந்த ஊழியர் கடலூர் 
S பாலகணபதி ஒப்பந்த ஊழியர் கடலூர் 
M  மணிகண்டன் ஒப்பந்த ஊழியர் கடலூர் 
P விஜய் ஒப்பந்த ஊழியர் கடலூர் 
K தீபன்ராஜ் ஒப்பந்த ஊழியர் கடலூர் 
G சக்தி வேல் ஒப்பந்த ஊழியர் கடலூர் 
சுரேஷ் ஒப்பந்த ஊழியர் கடலூர் 
5.வரவேற்புக்குழு 

தோழர்கள் 
R  பன்னீர்செல்வம் TM கடலூர்
V இளங்கோவன் TTA அரகண்டநல்லூர் 
 P குமார் TM கடலூர் 
R ஜெயராஜ் TM கடலூர் 
V பெருமாள் TM கடலூர் 
P ஜெயராஜ் TM நெல்லிக்குப்பம் 
V கிருஷ்ணமூர்த்தி TM சிதம்பரம் 
N ரேவதி STS கடலூர் 
V பாலகிருஷ்ணன் TM சிதம்பரம் 
R மாதேஸ்வரன் TM சிதம்பரம் 
6.மேடை ஏற்பாடுகள் குழு 

தோழர்கள் 
R செல்வம் Sr TOA விழுப்புரம் 
P பிச்சைபிள்ளை STS கடலூர் 
K அன்பாயிரம் TM உளுந்தூர்பேட்டை 
L மகாலிங்கம் TM விழுப்புரம் 
G ரங்கராஜு   TM பண்ருட்டி 
P அன்பு TM கடலூர் 
K தட்சணாமூர்த்தி TM விழுப்புரம் 
7.நிதிக்குழு 

தோழர்கள் 
A சாதிக் பாட்சா JAO கடலூர் 
P அழகிரி STS கள்ளக்குறிச்சி 
K கிருஷ்ணகுமார் TTA சிதம்பரம் 
P ராமானுஜம் TM விழுப்புரம் 
7.சிறப்பு விருந்தினர் உபசரிப்பு குழு 
தோழர் AC முகுந்தன் TM கடலூர் 
8.கோல அலங்காரம் 

தோழியர்கள் 
V கீதா STS கடலூர் 
M பார்வதி SSS கடலூர் 
K ஜோதி RM கடலூர் 
10.நிகழ்ச்சி புகைப்பட குழு 

தோழர் D ரவிச்சந்திரன் TM சிதம்பரம் 
11.மண்டபம் பொறுப்பாளர் 

தோழர் M பக்கிரி SSS Retired கடலூர் 

IDA 5% உயர்வு

ஜனவரி 2014 முதல் IDA 5% உயர்ந்துள்ளது. BSNL உத்திரவு இங்கே 

Tuesday, January 7, 2014

வார்த்தையாலே நன்றி சொல்வோம்!

அன்புள்ள தோழர்களே, தோழியர்களே, 
                    
              கடலூர் மாவட்ட சங்கம் பெருமிதத்தால் பூரித்து, உச்சியில் நின்றாடும் செங்கொடியாய் பறக்கிறது. நினைக்க நினைக்க நெஞ்சம் நிறைக்கும் நிகழ்வு,  யாருக்கும் கிட்டாத பேறு -ஒலிக்கதிர் பொன்விழா, கடலூரில் நடத்திட.  ஆண்டுவிழா ஆண்டுதோறும் வரும் ; பொன்விழா அப்படியா? பெரும் பொறுப்பு -நமக்களித்த மாநில சங்கத்திற்கு நன்றி.

                   




                 பொன்விழா, அதுவும் தோழர் O P குப்தாவின் முதல் நினைவு நாளில். பிரிந்து கிடந்த தபால் தந்தி சங்கங்களை ஒன்றாக்கும் ஒரே கொள்கையில் வந்து, சாதித்த பெரும் தலைவன். ஒற்றுமை உணர்வு நமக்குள் தானே வந்தது .
          
             ஒலிக்கதிர் என்றால் ஜெகன். ஜெகன் என்றால் ஒலிக்கதிர். பிறகு நமது உற்சாகத்திற்கு எது தடையாக முடியும்?  ஒரே சிந்தனைதான்  நம் அனைவருக்கும், பொன்விழா சிறக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்பதே.

வெல்லும் இப்படை என்றே 
செய்து முடித்தனர் தோழர்,
சிரம் தாழ்ந்து வணங்குகிறோம்.
   
                செய்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை என்பதால் அன்று , நன்றி சொல்ல நூறு அகராதியிலும் வார்த்தை இல்லை  என்பதாலும் அன்று. " நன்றி காட்டா  விட்டால் நன்றியே சாகும்" என நான்மணிக்கடிகையும் நல்ல தமிழ் நூல்களும் சொன்ன தமிழ் மரபில் இப்போதைக்கு வார்த்தையாலே நன்றி சொல்வோம்.




              தமிழகம் முழுவதிலிமிருந்து ஆயிரமாய் திரண்டு வந்த திருக்கூட்டம், விமானம் ரத்து செய்யப்பட, கடுங்குளிரிலும் டெல்லி விமான நிலையத்திலேயே தங்கி அடுத்த நாள் காலை விமானத்திலாவது வந்தே தீருவோம் என்ற நம் அகில இந்திய தலைவர், அகில இந்திய செயலர். அந்த மூத்த  தலைவர்களின் சிரமம் பொறுத்த தியாகத்திற்கு நன்றி .

           ஒலிக்கதிருக்கு பொன்விழா என்றதும் நூற்றுக்கணக்கான ஓய்வு பெற்ற நம் தோழர்களுக்கு எப்படித்தான் இளமை திரும்பியதோ? அவர்களை கண்டதும், நாம் செய்யும் பணி குறைவு என்ற நாணம் மீதூர நன்றி சொல்வோம்.

            கொள்கையில் மாறுபாடு- இருக்கட்டுமே அத்தனைக்கும் இடம்தந்த ஏடு  தானே ஒலிக்கதிர் என்றே வாழ்த்தினர் அத்தனை சங்கத் தலைவர்களும் .

            தலைமை பொது மேலாளர், முதுநிலை பொது மேலாளர், அதிகாரிகள் என வந்து விழாவிற்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றி.

              ஒன்றாய் மண்டபம் நிறைந்திருந்தது வானவில்லின் வர்ணக் கோலமாய்.  ஒவ்வொரு குழுவிற்கும் உறுப்பினர்களுக்கும் பெயர் சொல்லி பாராட்டும் முன்பு பொதுவாய் மனம் நிறைய, கண் கசிய நன்றி, தோழர்களே.
                              "புரட்சியின் போது வாழ்ந்தது பேரின்ப பேறு 
இளைஞனாய் பங்கேற்பு   சொர்க்கம் அதுவென்று  கூறு "
(Bliss was that day to live; Heaven to be young)
       என்ற பிரஞ்சு புரட்சியின் கவிதை வரிகளாய் 
"இருந்தேன் இன்ப பொன்விழா நிகழ்வில் 
உழைத்தேன் அதற்கு சொர்க்கமது என் வாழ்வில் "
 என்று காணும் போதும் காணும் போதும் நன்றி சொல்வோம்!

பெருமகிழ்வோடு 
தோழமையுடன் 
இரா ஸ்ரீதர் 
மாவட்ட செயலாளர்& 
பொன்விழா விழாக்குழு பொதுச்செயலாளர் 

Monday, January 6, 2014

தோழர்கள் கவனத்திற்கு -உபசரிப்பு குழுவினர் விவரம்

வெளியூரிலிருந்து வரும் தோழர்கள் கீழ்காணும் உபசரிப்பு குழுவினரை தொடர்புகொள்ளலாம் 

தோழர்கள்                 செல்பேசி எண் 
V இளங்கோவன் ---9486100691
P குமார் -------------------9486104246
R பன்னீர்செல்வம் -9487138748
P ஜெயராஜ் ------------- 9486107831


மேலும் பாண்டிசேரி மற்றும் பண்ருட்டி மார்க்கமாக வருபவர்கள் வரும் வழியில் போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும் . ரயில் மார்க்கமாக வருபவர்கள் திருப்பாதிரிபுலியூர் (TDPR ) நிலையத்தில் இறங்கி பேருந்து அல்லது ஷேர் ஆட்டோ மூலமாக போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும் .
வரைபடம் 

Saturday, January 4, 2014

ஒலிக்கதிர் பொன்விழா ஏற்பாடுகள் கடலூரில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.