.

Thursday, July 24, 2014

புதிய போனஸ் வரையறை 

புதிய போனஸ் கணக்கீட்டை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட போனஸ் குழுக்கூட்டம் 23/07/2014 அன்று நடைபெற்றது.
இலாபத்துடன் இணைந்த போனஸ் என்பது இல்லாமல் உற்பத்தியுடன் இணைந்த போனஸ் என்ற நமது கோரிக்கையின் அடிப்படையில் நிர்வாகம் தனது குறிப்பை KPI  அளித்துள்ளது.

புதிய தரைவழி தொலைபேசி இணைப்புக்களை கொடுப்பது..
தரைவழி இணைப்புக்களை தக்கவைப்பது..
புதிய அகன்ற அலைவரிசை BB   இணைப்புக்களை கொடுப்பது..
அகன்ற அலைவரிசை BB   இணைப்புக்களை தக்கவைப்பது..
WIMAX மற்றும் CDMA இணைப்புக்களை கொடுப்பது
என்ற மேற்கண்ட பணிகளுக்காக
55 மதிப்பெண்கள் நிர்ணயிக்கபட்டுள்ளது.
தரைவழி,அகன்ற அலைவரிசை இணைப்புக்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுப்பது..
தரைவழி,அகன்ற அலைவரிசை பழுதுகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் அகற்றுவது..
போன்ற பணிகளுக்காக 35 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CM எனப்படும் CONSUMER MOBILITY
கம்பியில்லா தொலைபேசி பகுதிக்கு 10 மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளது.
விற்பனைப்பிரிவு, புதிய சேவைப்பிரிவு, வணிகப்பிரிவு
போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மொத்தத்தில்...
பழுதுகளை உடனே அகற்றுதல்...
இணைப்புக்களை உடனே கொடுத்தல்..
என்ற பணிகளை மட்டும் நாம் செவ்வனே செய்தால்
 போனஸ் கிட்டும்.. என்பது
நிர்வாகத்தின் தற்போதைய நிலைபாடு...

நமது நிலைபாடு என்ன?
குரல் எழுப்பி போனஸ் பெறப்போகின்றோமா?..
உடல் உழைத்து போனஸ் பெறப்போகின்றோமா?..
என்பதுதான் தற்போதைய கேள்வி..


நன்றி:NFTE காரைக்குடி வலைத்தளம் 

No comments:

Post a Comment