தோழர்களே!
ஏனெனில் நமது தொழிற்சங்க பிதாமகர் தோழர் குப்தா கூறி உள்ளார்,
நமது மாவட்டத்தில் பெருவாரியான ஊழியர்களின் நலன்களை காக்கும் வகையில் NFTE , BSNLEU ,FNTO தொழிற்சங்கங்கள் இணைந்து சுழல் மாற்றலை சுமூகமாக நடத்தி முடித்தோம். முந்தைய ஆண்டுகளின் அனுபவங்களின் அடிப்படையில் ஊழியர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில்,(அதிக பட்சம் 150 கி.மீ தாண்டி மாற்றல் உத்தரவிட்டதை மாற்றி) 25 கி.மீ க்குள் மாற்றல் என்பதாக மாற்றி அமைத்தோம்.
பல நாட்கள் கிளைச் செயலர்கலோடும் தோழர்களோடும் விவாதித்ததின் அடிப்படையிலேயே இது சாத்தியமாயிற்று. அந்த ஆலோசனைகளின் போதெல்லாம் வராத சில தோழர்கள் குறுகிய குழுப்போக்கின் அடிப்படையில் இதனை எதிர்த்தனர். அதன் வெளிப்பாடு தான் சம்மேளன செயலரே முன்னின்று நடத்திய ஆர்ப்பாட்டம்.
இப்போது தோழர் தனுஷ்கோடி TM முண்டியம்பாக்கம் மற்றும் மூவர் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT ) சென்னையில் ஒரு ஆணை பெற்றுள்ளனர். 25-06-2014 தேதியிட்ட அந்த ஆணை 84 பேருக்கான Long Stay மாற்றல் வழங்கப்பட்ட 09-06-14 தேதியிட்ட உத்தரவு எண் 106 மீதானது. அந்த ஆணை வழக்கு தொடர்ந்த 1+3 தோழர்களுக்கு மட்டுமே பொருந்த கூடிய வகையில் வழங்கப்பட்டுள்ளது. 25-06-14 தேதியின் படி STATUS QUO நீடிக்க வேண்டும்; இது முதன்மை வழக்கின் முடிவுக்கு உட்பட்டது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகம் சட்டப்படி வழக்கை சந்திக்கும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் மீது நாம் கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை. சிலர் விரும்புவது போல அமலாக்கப்பட்ட ஏனையோரின் உத்தரவில் மாற்றம் ஏதும் விளையபோவதில்லை.
ஸ்தாபன கோட்பாடுகளை பற்றி உரத்து பேசுபவர்கள் தொழிலாளர் வர்க்க ஸ்தாபன அமைப்பான சங்கத்தை நம்பாமல், நீதி மன்றத்தை (முன்பு காவல் நிலையத்தையும்) நாடி சென்றிருப்பது குறித்து தோழர்கள் அமைதியாக சிந்திக்க வேண்டுகிறோம்.
ஏனெனில் நமது தொழிற்சங்க பிதாமகர் தோழர் குப்தா கூறி உள்ளார்,
"நமக்கும் அரசுக்கும் உள்ள முரண்பாட்டை ஒப்பு நோக்க சங்கங்களுக்கிடையே ஆன முரண்பாடுகள் பெரிது அல்ல;
தீர்க்க கூடியவையே"
'சங்கங்களுக்கிடையே ஒற்றுமை சாத்தியம் எனில், சங்கத்திற்குள் ஒற்றுமை அசாத்தியமா என்ன?'
No comments:
Post a Comment