தமிழகத்தில் இன்னும் பல மாவட்டங்களில்
ERP பணிகள் முழுமை பெறாத நிலையில்,
ERP அமுலாக்கம் 01/12/2014க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை 05/11/2014 அன்று
மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மாவட்ட மட்டத்தில் அனைத்து பணப்பட்டுவாடாக்களும் 26/11/2014க்குள் முடிக்கப்பட வேண்டும்.
ERP மூலம் டிசம்பர் மாத சம்பளம் தயாரிக்கப்பட்ட பின்புதான் GPF உள்ளிட்ட ஊழியர்களின் மற்ற பட்டுவாடாக்கள் வழங்கப்படும்.
டிசம்பர் மாதம் முழுக்க எந்த விதமான பணப்பட்டுவாடாக்களும் இருக்காது.
GPF தொகைக்கு விண்ணப்பிப்பது
GPFஐக் கூட்டுவது - குறைப்பது
வருமான வரிக்காக சேமிப்பு மற்றும் வீட்டுக்கடன் கட்டிய விவரங்களை அளிப்பது
வீட்டு வாடகை கொடுத்த தகவல்களை அளிப்பது
HRMSல் தவறான தகவல் இருந்தால் உரிய திருத்தம் செய்வது
போன்ற பிரச்சினைகளை தோழர்கள்
நவம்பர் மாதத்திலே செய்து முடிக்கவும்.
ERP அமுலாக்கத்தை அவசர கோலத்தில்
அள்ளி தெளிக்க முற்பட்ட மாநில நிர்வாகத்தை
சற்றே நிதானிக்க வைத்த
அனைத்து சங்க கூட்டமைப்பிற்கு நமது நன்றி.
நன்றி: NFTE காரைக்குடி வலைத்தளம்
No comments:
Post a Comment