6-11-2014 செயலகக்கூட்ட முடிவுகள்
6-11-2014 அன்று சங்க அலுவலகத்தில் செயலகக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட,
கிளைச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செயலகக்கூட்டதில் கீழ்க்கண்ட முடிவுகள்
எடுக்கப்பட்டன.
v அனைத்து ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் 27/11/2014 அன்று நடைபெறும் நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு வெற்றிகரமாக்குவது எனவும்,
v புதுவையில் நவம்பர்’22 அன்று நடைபெறும் நமது NFPTE சம்மேளன வைரவிழாவில் மாவட்டம் முழுதும் இருந்து தோழர்கள் பெருமளவில் கலந்து கொள்வது எனவும், மேலும் நமது மாவட்டப் பங்காக ரூ.10000/= அளிப்பது எனவும், அதற்கு நமது கிளைகள் ஒவ்வொன்றும் ரூ.500/= தனது பங்காக செலுத்தவேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
v இந்த மாதம் முதல் மாவட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கான புதிய
ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஒப்பந்தத்தின்படி ஒப்பந்த ஊழியர்களின் பணியிடங்கள்
சீரமைக்கப்படவுள்ளது. கிளைச்செயலர்கள் TMTCLU மாவட்ட நிர்வாகிகளுடன் பேசி தங்களது கருத்துகளை பகிர்ந்து
கொள்ளவும்.
v ஜபல்பூரில் நமது விழுப்புரம் தோழர்.சங்கரன் மீது தாக்குதல்
நடத்திய ஆனந்தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் , அதற்கான விளக்கம் கேட்டு மாவட்ட
சங்கம் நோட்டீஸ் அனுப்புவது எனவும் இச்செயலகக்கூட்டம்
முடிவெடுத்துள்ளது.
No comments:
Post a Comment