.

Tuesday, November 4, 2014

தமிழ்மாநில கவுன்சில் கூட்டம்

தமிழ்மாநில கவுன்சில் கூட்டம் 03-11-2014 அன்று மாநில தலைமைப் பொதுமேலாளர் தலைமையில் நடைபெற்றது. நமது மாவட்டச்செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் உறுப்பினர் தரப்பில் கீழ்க்கண்ட தனது கருத்தை கவுன்சிலில் சுட்டிக்காட்டினார்.

Ø  நமது கோட்டத்தில் குடியிருப்புகளில் உள்ள கழிவறை தொட்டிகளின் நிலைகளையும், குடியிருப்புகள் குடியிருப்பதற்கு தகுதியற்ற நிலையில் இருப்பதையும்  மாநிலக்  கவுன்சிலில் சுட்டிக்காட்டினார்..

Ø  HBA கடன் பெற்றுள்ளவர்கள் வீடு மீதான இன்சூரன்ஸ் செய்து  இரண்டு ஆண்டுகள் வரை  இடைவெளி ஏற்பட்டிருந்தால் அந்த இடைவெளியை மாநிலப் தலைமைப் பொதுமேலாளர் சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதனை மாநில நிர்வாகம் ஏற்றுகொண்டது.

Ø  கடலூர் மாவட்டத்தில் உள்ள  உழியர்களின் சர்வீஸ் புத்தகத்தை அந்த அந்த தலமட்டங்களில் ஊழியர்களின் நேரடி பார்வைக்கு வைக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Ø  கடலூர் ஒப்பந்தகாரரான INNOVATIVE SOLUTIONS-ஐ பிளாக் லிஸ்ட் செய்யவேண்டுமெனவும் வலியுறுத்தினார்.


மாநிலக் கவுன்சிலில் நமது மாநிலச்செயலரின் பங்கு வெகு சிறப்பாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment