6-வது மாவட்ட செயற்குழு
செஞ்சி
வீரம் விளைந்த செஞ்சி மண்ணில் மாவட்டத்
தலைவர் தோழர்.R.செல்வம் தலைமையில் 19-12-2014ல் சிறப்பாக நடைபெற்றது. தொலைபேசியகத்தில் கடைசி நேர அனுமதி மறுப்பால் கூட்டம்
மனோரஞ்சிதம் திருமண மண்டபதிற்கு
மாற்றப்பட்டாலும் செஞ்சி தோழர்கள் மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர். சிறப்பான உணவு விருந்தோம்பல் என தமது
செயல்பாட்டால் சிறிய கிளையான செஞ்சியா என கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட
அனைவரையும் பெருமைப்பட வைத்தது.
தோழர்.Y.ஹாரூன்பாஷா-TTA செஞ்சி வரவேற்புரை ஆற்ற, மாவட்ட அமைப்புச்
செயலர் தோழர்.K.அம்பாயிரம் கடந்த காலங்களில் உயிர் நீத்த
தொழிலாளர், தேசிய மற்றும் சமுக சேவையாளர்களுக்கு அஞ்சலியையும், சமீபத்திய
பாகிஸ்தான் பெஷாவரில் தலிபான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில்
கருகிய மொட்டுகளுக்கும் அஞ்சலி செலுத்தினார்.
மாவட்ட தலைவர் தோழர் R..செல்வம் தலைமை உரையாற்ற மாவட்ட செயற்குழு
துவங்கியது. அரகண்டநல்லூர், நெய்வேலி
கிளைச் செயலர்கள்,
மற்றும்
தவிர்க்க முடியாத வேலையின் காரணமாக மாவட்ட துணைத்தலைவர் தோழியர்.V.கீதா, மாவட்ட
உதவிச்செயலர் தோழர்.M.தினகரன் தவிர அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் மாநிலதுணைத் தலைவர் தோழர்.V,லோகநாதன் , தோழர் S.தமிழ்மணி, தலமட்ட குழு உறுபினர்கள், பணிக்குழு
உறுப்பினர்கள், சென்னை கூட்டுறவு சங்க நமது பிரதிநிதிகள் முன்னாள் மாவட்ட செயலர்
தோழர்.P.சுந்தரமூர்த்தி உள்ளிடச் சிறப்பு அழைப்பாளர்கள் இருபது பேரும் கலந்து
கொள்ள செயற்குழு தொடங்கியது.
கூட்டு நடவடிக்கை குழுவின் நவம்பர்-27 வேலைநிறுத்த போராட்டத்திற்காக இணைந்த கூட்டங்கள்
மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டபோது பண்ருட்டியில் கூட்டம் நடத்த பண்ருட்டி
கிளைச்செயலர் மறுத்தார், என்றாலும் அகில இந்திய போராட்டத்தை மேலெடுத்துச்செல்ல
பண்ருட்டித் தோழர்கள் பிரச்சாரக் கூட்டத்தை சிறப்பாக நடத்தினர். பின்னர் நடந்த
பொதுக்குழுவில் கிளை உதவிச்செயலர் தோழர்.S.பாஸ்கரன் அவர்களைக் கிளைச் செயலராகத்
தேர்ந்தெடுத்தனர்.
பண்ருட்டி கிளை பிரச்சனையை
முதலில் பேச வேண்டும் என கோரியபோது அமைப்பு நிலை விவாதத்தில் தோழர்.P.முருகன்
உட்பட தோழர்கள் பேசலாம் என் தலைமை கூறியதை ஏற்க மறுத்த சில தோழர்கள் தொடர்ந்து
கூச்சல் கோஷமிட்டு செயற்குழுக்கூட்ட நிகழ்வை சீர்குலைக்க முயன்றனர். எனவே
செயற்குழு ஒத்தி வைக்கப்பட்டு, செஞ்சி கிளை மாநாடு கூடியது.
அகில இந்திய மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.P.காமராஜ்
சிறப்பான துவக்க உரையாற்றினார்.
தமது 45 நிமிட உரையில் நவம்பர்-27 வேலைநிறுத்தத்தின் 30 அம்ச கோரிக்கைகளை விளக்கியும், போராட்ட
வெற்றியின் காரணமாக JAC
மேலும் பேச்சு வார்த்தை நடத்த அழைத்துள்ளது என்ற செய்தியையும் தெரிவித்தார்.
மேலும் அதிகாரிகள்-ஊழியர்கள் கூட்டமைப்பின் மார்ச்’2015 வேலை நிறுத்தத்தின் 21 அம்ச கோரிக்கைகளைச் சிறப்பாக விளக்கி நல்ல
துவக்கவுரை தந்தார்.
அருமையான ஆண்டறிக்கைக்குப்பின் தோழர்கள் R.செல்வம்,R.ஸ்ரீதர், முன்னாள் மாவட்டச் செயலர் P.சுந்தரமூர்த்தி, திண்டிவனம் கிளைச் செயலர் தோழர். M.செல்வக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில உதவிச் செயலர் தோழர்.P.சென்னக்கேசவன் தமது சிறப்புரையில் இன்றைய மாறிவரும்
தொழில் நுட்பம், மனித ஆற்றல் மேம்பாடு அம்சமான நிர்வாக தொழிலாளர் உறவு, BSNL
சந்தித்து வரும் நெருக்கடிகள் குறித்து சிறப்பாக உரையாற்றினார். நவம்பர்
போராட்டத்தில் தமிழகத்தில் கடலூர் மூன்றாம் இடம் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டு
மாவட்ட சங்க செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார். பின்னர் செஞ்சி கிளைத் தோழர்.R.ஜானகிராமன்
TM அவர்களுக்கு பணி ஒய்வு பாராட்டு நடைபெற்றது. தோழருக்கு கிளையின் சார்பாக நினைவு
பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தோழர்.R.ஸ்ரீதர். அவரை பாராட்டி
பேசினார். அத்தோழர் மாநிலசங்க நன்கொடையாக ரூ.500, மாவட்டத்திற்கு ரூ.500,கிளைசங்கத்திற்கு ரூ.1000 வழங்கி ஏற்புரையாற்றினார். கிளைத் தலைவராக
G.பால்ராஜ் TM, கிளைச் செயலராக தோழர்.R.ரவி TM, பொருளாளராக தோழர்.A.சேகர்-TM உள்ளிட்ட தோழர்கள் ஒருமனதாக
தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னாள் கிளைத்தலைவர் தோழர் A.செல்வராஜ் ரூ.500 நன்கொடை வழங்கினார். சிறிய கிளை உயரிய
உணவு, உபசரிப்பு என செஞ்சிக் கோட்டை என உயர்ந்து நின்றனர்.
உணவு இடைவெளிக்குப்பின் மாவட்ட
செயற்குழு கூடிய போதும் மீண்டும் பண்ருட்டி பிரச்சனை எழுப்பிய நண்பர்கள் தொடர்ந்து
கூச்சலிட்டு செயற்குழுவைச் சீர்குலைக்க முயன்றனர். விழுப்புரம் தோழர்.G.கணேசன்
தனது கருத்தை பதிவு செய்ய மாவட்டத்தலைவர் R.செல்வம் விளக்கமளித்தார். பண்ருட்டி
தோழர். முருகன் தனது கருத்தை பதிவு செய்ய
தோழர்.G.ரெங்கராஜூ தனது கருத்தை எடுத்துரைத்தார். தலைமையின் மாற்று ஆலோசனைகள்
எதையும் ஏற்க மறுத்து கூச்சலிட்ட நண்பர்களின் நடவடிக்கை திட்டமிட்டதாகவும் வேறு
எந்த பிரச்சனை குறித்தும் விவாதிக்கத் தயார் இல்லாத குழுப்போக்கையும் வெட்ட
வெளிச்சமாகியது.
எனவே பண்ருட்டி கிளைச்செயலராக
தோழர்.S.பாஸ்கரன் தேர்ந்தெடுக்கப்பட்டதை மாவட்ட செயற்குழு பெரும்பான்மை
அடிப்படையில் ஏற்றுக்கொண்டது .பின்னர் சென்ற மாவட்ட செயற்குழுவில் சமர்பிக்கப்பட்ட
நிதி அறிக்கைக்குப்பின் உள்ள காலத்தின் வரவு செலவு கணக்குகள் (தணிக்கைசெய்யப்படாதது)
மாவட்ட பொருளாளர் தோழர்.A.சாதிக்பாஷா அவர்களால் அறிக்கையாக தரப்பட்டது.(அறிக்கை
தனியே காண்க).
மாநில அமைப்பு செயலர்
தோழர்.N.அன்பழகன் வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டபோது நண்பர்களின் கூச்சலால் அவரால்
பேச இயலவில்லை. செயற்குழுவில் தீர்மானங்களை மாவட்ட உதவிச்செயலர்
தோழர்.D.ரவிச்சந்திரன் முன்மொழிய மாவட்டப்பொருளர் தோழர்.A.சாதிக்பாஷா
வழிமொழிந்தார். (தீர்மானங்கள் தனியே காண்க)
செஞ்சிக்கிளை பொருளாளர்
தோழர்.A.சேகர் நன்றி கூற செயற்குழுக்கூட்டம் நிறைவுற்றது.
செஞ்சி தோழர்களுக்கு மீண்டும்
நமது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறோம்.
தீர்மானங்கள்
1. நீதிமன்ற வழக்கின் காரணமாக
TTA-க்கள் JTO ஆக பதவி உயர்வு பெறுவதில் தாமதம் நிலவுகிறது. நீதிமன்ற வழக்கின் விரைவான
தீர்விற்கு மாநில சங்கம் முயற்சி எடுக்க வேண்டும் என இச்செயற்குழு
கேட்டுக்கொள்கிறது.
2. நமது பொதுமேலாளர் அவர்கள்
புதுவை,கடலூர்,குடந்தை ஆகிய 3 SSA-க்கான நிர்வாகம் செய்வதால் பணிசுமையின் காரணமாக
கடலூர் வருவது அரிதாக இருக்கின்றது.மாவட்ட நிர்வாகம் நாம் வைக்கின்ற பிரச்சனைகளை
செவிமடுத்தலும் பிரச்சனைகள் தீர்வில் கூடுதல் கவனமும்,கூடுதல் அக்கறையும் தேவை என
இச்செயற்குழு கருதுகிறது.
3. BSNL புத்தாக்கம் தொடர்பாக
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிக்கும் எல்லா போராட்டங்களிலும் அனைத்து
தோழர்களையும் முழுமையாக பங்கேற்க செய்து வெற்றிகரமாக்குவது.
4. FORUM சார்பாக நடைபெறவுள்ள
2015-மார்ச் 17 ல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஒட்டி மாநிலந்தழுவிய கருத்தரங்கினை
கடலூரில் 2015- ஜனவரி கடைசி வாரத்தில் சிறப்பாக நடத்துவது என்றும் தோழர்கள்
ஒவ்வொருவரும் ரூபாய் 100 நன்கொடை அளிக்க வேண்டுமாய் இச்செயற்குழு
கேட்டுக் கொள்கிறது.
5. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அக்டோபர்
2014 சம்பளம் இதுவரை
கிடைக்கவில்லை.நாமும் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தோடு இணைந்து போராட்டம்
நடத்தியுள்ளோம்.நவம்பர் 2014 சம்பளம் ZONE-I ல் வங்கியில்
செலுத்தப்பட்டுள்ளது. ZONE-II EOI ல் பணியாற்றக்கூடிய தோழர்களுக்கும்
வங்கியில் ஒவ்வொரு மாதமும் காலத்தே கிடைப்பதற்கும்,புதிய டெண்டர் குளறுபடிகளை சரி
செய்வதற்கும்,EPF,ESI முறைபடுத்துவதற்கும் ID கார்டு பெறுவதற்கும் மாவட்ட
நிர்வாகத்தோடு தொடர்ந்து பேசுவதும் தேவையேற்படின் அதற்காக போராட தோழர்கள்
தயார்நிலையில் இருக்க வேண்டும் என இச்செயற்குழு பணிக்கிறது.
6. மாவட்ட சங்கத்தில் காலியாக
உள்ள மாவட்ட உதவி தலைவர் பொறுப்பிற்கு தோழர் V.குப்பன்.TM.திண்டிவனம் அவர்களையும்
மாவட்ட உதவி செயலர் பொறுப்பிற்கு தோழர் D.குழந்தைநாதன் TTA/ULD. அவர்களையும்
இச்செயற்குழு நியமனம் செய்கிறது.
7. பண்ருட்டி கிளை பொதுக்குழுவில்
கிளைசெயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் S.பாஸ்கரன்.TM/PRT அவர்களை
இச்செயற்குழு அங்கீகரிக்கிறது.
8. ஜபல்பூரில் நடைபெற்ற
வன்முறைக்கு விளக்கம் கேட்டு தோழர் S.ஆனந்தன். TTA/CDL அவர்களுக்கு கடிதம் ஏற்கனவே
கொடுக்கப்பட்டுள்ளது.இதுவரை விளக்கம் வராததால் மீண்டும் நினைவூட்டு கடிதம்
கொடுப்பதென்றும் அதன் பிறகு மாவட்ட செயலக கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க
இச்செயற்குழு அதிகாரம் கொடுக்கிறது.
முன் மொழிதல்:
D.ரவிச்சந்திரன் மாவட்ட உதவிசெயலர்.
வழி மொழிதல்: A.சாதிக் பாஷா.
மாவட்ட பொருளர்.
வரவு செலவு அறிக்கை
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட சங்க நிர்வாகிகள்
பணிசிறக்க வாழ்த்துக்கள்
பணிசிறக்க வாழ்த்துக்கள்
தோழர்.D.குழந்தைநாதன்
மாவட்ட உதவிச்செயலர்
தோழர்.V.குப்பன்
மாவட்ட துணைத்தலைவர்
No comments:
Post a Comment