தமிழ் இலக்கணம்
தமிழில் இலக்கனச் சட்ட விதிகளை உருவாக்கி
விட்டு இலக்கியம் படைக்கப்படுவதில்லை. இலக்கிய ஆக்கங்களை அறிந்து அதன்
அடிப்படையில் இலக்கண விதிகள் உருவாக்கப்பபடுகின்றன. அதாவது, தமிழ் இல்கக்கணம்
வாழ்க்கை இயல்போடு ஒன்றிப் பயணிப்பது, கீழே உள்ள உதாரணத்தைப் பாருங்கள், எளிதில்
விளங்கும்.
சோறு உண்டான்
வெற்றிலை
தின்றான்
மேலே உள்ளவற்றை தமிழர்கள் எப்படி புரிந்து
கொள்வார்கள்? வெறும் சோறை உண்டான், வெற்று இலையைத் தின்றான் என்றா? சோற்றின்
இனமாகிய குழம்பு , ரசம், மோர், காய்கறி முதலியவற்றோடு உண்டான். வெற்றிலையும் அதன்
இனமாகிய சுண்ணாம்பு, பாக்கு இவற்றுடன் தின்றான் என்பதை விளங்கிக் கொள்வார்கள்.
இதனைத் தமிழ் இலக்கணம் ‘’ இனங்குறித்தல்’’ என வகைபடுத்துகிறது. பெயர்சொல் , வினைச்சொல்,
இடைச்சொல்,மற்றும் உரிச்சொல் என தன்னை உணர்த்துவதோடு தான் இனத்தையும் சேர்த்து
பொருள் உணர்த்துவதே இனங்குறித்தல் எனப்படும்..
ஒரு மகன் “கம்ப்யூட்டர்” வேண்டுமென்று கேட்டால் எந்த தாயும்,
தகப்பனும் வெறும் மானிட்டரை மட்டும் வாங்கித் தருவதில்லை. மானிட்டரோடு CPU, UPS, கீ போர்டு , மௌஸ், பிரிண்டர், இணையம் இவையெல்லாம் வைக்க
டேபிள், சேர் என பிரித்துக் கேட்கவில்லையே என்று பெற்றோர் மறுப்பதில்லை.
இனங்குறித்து
அறிந்து செயல்படுக.
தோழமையுடன்
மாவட்டச்
சங்கம், கடலூர்
நன்றிஐயா
ReplyDelete