.

Monday, December 29, 2014

  BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு கூட்டம்- கடலூர் 

BSNL அனைத்து ஊழியர்-அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு  சார்பாக  கலந்தாய்வுக் கூட்டம் கடலூரில் இன்று 29-12-2014 மாலை  BSNLEU அலுவலகத்தில் NFTE மாவட்டச் செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர்கள் BSNLEU-K.T.சம்பந்தம், SNEA- C.பாண்டுரங்கன், SNEA- மத்திய செயற்குழு உறுப்பினர் தோழர்.அசோகன், AIBSNLEA-மாவட்டச்செயலர் P.வெங்கடேசன், P.சிவக்குமரன்-SNEA, NFTE மாவட்ட அமைப்பு செயலர். தோழர். முகுந்தன், NFTE மூத்த தோழர்.K.செல்வராஜ், R.பன்னீர்செல்வம், NFTE முன்னாள் மாவட்ட செயலர் தோழர்.P.சுந்தரமூர்த்தி, BSNLEU கிளைச் செயலர் தோழர்.S.சௌந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

              ஜனவரி’30 அன்று கடலூரில் மாநிலம் அளவிலான கருத்தரங்கம் தேதி  மாற்றம் குறித்த நமது தமிழ் மாநிலச்செயலரின் வேண்டுகோளை சென்றக்கூட்டத்தில் மாவட்டசெயலர் தோழர் இரா.ஸ்ரீதர் முன்வைத்திருந்தார். இதைப்  பற்றி இன்றைய இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கன்வீனர் தோழர்.K.T.சம்மந்தம் கருத்தரங்க தேதி மாற்றம் செய்வதில் உள்ள சில பிரச்சனைகளை எடுத்துரைத்தார். கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டபின் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஜனவரி’30 அன்றே இக்கருத்தரங்கை கடலூரில் சிறப்பாக நடத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
     
   BSNL அனைத்து ஊழியர்-அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் அறைகூவலை ஏற்று மாவட்டம் தழுவிய தர்ணா போராட்டத்தை கடலூரில் ஜனவரி -7 அன்று நடத்துவது எனவும்,

     கையெழுத்து இயக்கம் ஜனவரி-3 அன்று பண்ருட்டி, ஜனவரி-6 அன்று கள்ளக்குறிச்சி, ஜனவரி-10 அன்று  உளுந்தூர்பேட்டையிலும் நடைபெறும், அன்றே உளுந்தூர்பேட்டையில் கூட்டமைப்பு கூட்டம் நடத்துவது எனவும்,

      கருத்தரங்கத்திற்கான செலவிற்காக  NFTE ரூ.20.000. BSNLEU ரூ.20,000, SNEA ரூ.10,000, AIBSNLEA ரூ.10,000, தருவது எனவும், கருத்தரங்கம் நடத்தப்படும் மண்டபச் செலவை மாநிலசங்கம் வழங்கும் என முடிவெடுக்கப்பட்டது.

     நமது சங்க இதழ் ஒலிக்கதிர் பொன்விழா நடைபெற்ற அதே கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் ஜனவரி30 மதியம் 2-30 மணிக்கு இக்கருத்தரங்கம் நடைபெறும்.

 செஞ்சியில் நடைபெற்ற  மாவட்ட செயற்குழு முடிவின்படி உறுப்பினர்கள் அனைவரும் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற  ரூ.100/-நன்கொடை அளிக்கவேண்டும்.

செயற்குழு முடிவினை ஏற்று கிளைச்செயலர்கள் அனைவரும்  உறுப்பினர்கள் அனைவரிடமிருந்தும் விரைவில் வசூலித்து தரும்படி மாவட்ட சங்கம் கேட்டுகொள்கிறது...




ஒப்பந்த ஊழியர் ஊதியம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு முந்தைய ஒப்பந்தக்காரரால் தரப்படாமல் இருந்த அக்டோபர் மாதத்திய ஊதியம் புதிய ஒப்பந்தக்காரர் மூலம்   நாளை 30-12-2014 வழங்கப்படவுள்ளது. ERP அமுல்படுத்திய பிறகும் தொடர் முயற்சியின் காரணமாக  பட்டுவாடா செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. இப்பிரச்சினையை பேசி தீர்த்து வைத்த மாவட்ட சங்கங்களுக்கு (NFTE,BSNLEU,TMTCLU,TNTCWU ) நன்றி!

டிசம்பர் மாதத்திய சம்பளம் ஜனவரி-7 க்குள் வழங்கப்படவுள்ளது, (நவம்பர் மாத சம்பளம் டிசம்பர்-1 க்குள் வழங்கப்பட்டுவிட்டது)  


No comments:

Post a Comment