07-01-2014 புதன் கிழமை மாலை
கடலூர் மாவட்டசங்க அலுவலகத்தில் மாவட்டத்தலைவர் தோழர்.
R.செல்வம்
அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் தோழர். V.லோகநாதன், மூத்த தோழர்.
S.தமிழ்மணி,
மாவட்டச் சங்க நிர்வாகிகள், கிளைச்சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள் மற்றும்
முன்னனித்தோழர்கள் கலந்துகொண்டனர். அவ்வமயம் செஞ்சியில் நடைபெற்ற மாவட்ட
செயற்குழுவில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட உதவிச்செயலர் தோழர்.
D.குழந்தைநாதன்
அவர்களை தோழர். S.தமிழ்மணி அவர்களும் பண்ருட்டி கிளைச்செயலர்
தோழர், R.பாஸ்கரன் அவர்களை மாவட்டத்தலைவர் செல்வம்
அவர்களும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.
செயலக்கூட்டத்தில் கீழ்கண்ட
முடிவுகள் எடுக்கப்பட்டன.
- 1. அகில இந்திய வேலைநிறுத்த போராட்ட விளக்க கருத்தரங்கத்தை ஜனவரி-30 அன்று கடலூரில் சிறப்பாக நடத்துவது அதற்க்காக மாவட்டசங்கம் அறிவித்த நன்கொடை ரூ.100 அனைத்து தோழர்களிடமும் உடனடியாகப் பெற்று மாவட்டசங்கத்திடம் வழங்கவேண்டும் என இச்செயலகக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
- 2. மக்கள் சந்திப்பு கூட்டத்தை சிறப்பாக நடத்திய கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, கள்ளக்குறிச்சித் தோழர்களை வெகுவாகப் பாராட்டுகிறது. இதே போன்று ஜனவரி-8 விழுப்புரம், ஜனவரி-10 உளுந்தூர்பேட்டை, ஜனவரி-12 நெய்வேலி டவுன்ஷிப் ஆகிய இடங்களிலும் சிறப்பாக நடத்த கிளைச்சங்கங்களை கேட்டுக்கொள்கிறது
- 3. மின் விபத்தில் உயிர்நீத்த சிதம்பரம் ஒப்பந்த ஊழியர் தோழர். பாலசுப்ரமணியன் அவர்களின் குடும்ப நிவாரண நிதி தோழர்களிடம் கேட்டு வழங்கிட வேண்டிக்கொள்கிறது,
- 4. தோழர். ஆனந்தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது இதுவரை பதில் தராததால் மீண்டும் நினைவூட்டுக் கடிதம் அனுப்புவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment