.

Thursday, February 19, 2015

TTA இலாக்காத்தேர்வு
TTA இலாக்கா போட்டித் தேர்வை நடத்துவதற்கு
மாநில நிர்வாகங்களை டெல்லி தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
07/03/2015க்குள் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.
07/06/2015 அன்று நாடு முழுக்க தேர்வு நடைபெறும்.
தேர்வு நடந்த 3 மாதங்களுக்குள் 07/09/2015க்குள் முடிவுகள் வெளியிடப்படும்.
தோழர்கள்..  தயாராகவும்..
                                           


ERP - பிரச்சினைகள் தீர்வு
ERP அமுல்படுத்தப்பட்ட பல மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இவை யாவும் சம்பந்தப்பட்ட  மாநிலங்களால் சுட்டிக்காட்டப்பட்டு தற்போது அந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று டெல்லி தலைமை அலுவலகம் 17/02/2015 அன்று வெளியிட்டுள்ள கடிதக்குறிப்பில் கூறியுள்ளது.
அதன்படி...
வீட்டு வாடகைப்படி கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி சரி செய்யப்பட்டுள்ளது.
ஒரு மாதம் முழுமையும் விடுப்பில் சென்றவர்களுக்கு போக்குவரத்துப்படி, தகுதி மேம்பாட்டுப்படி மற்றும் தொழில் மேம்பாட்டுப்படி TRANSPORT ALLOWANCE, PROFESSIONAL UP GRADATION ALLOWANCE மற்றும் SKILL UP GRADATION ALLOWANCE  ஆகியவை கிடையாது. தற்போது மேற்கண்டவை சரி செய்யப்பட்டுள்ளது.
மாற்றலில் செல்வோர் TA முன்பணம் பெறுவதற்கும், TA பில் செலுத்துவதற்கும் ERPயில் வசதிகள் இல்லை. தற்போது இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அலைச்சல்படி என்னும் CONVEYANCE ALLOWANCE மற்றும் FURNISHING ALLOWANCE விண்ணப்பிக்கும் வசதி ERPயில் இல்லை. தற்போது தோழர்கள் ERP மூலம் விண்ணப்பிக்கலாம்.
வருமான வரி கணக்கீட்டில் வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவச்  செலவு ஆகியவற்றை கணக்கிடுவதில் நேர்ந்த தவறு சரி செய்யப்பட்டுள்ளது.
01/08/2014க்குப்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு GSLI என்னும் LIC ஆயுள் காப்பீடு கிடையாது. தற்போது இது சரி செய்யப்பட்டுள்ளது.
DIES-NON என்னும் பணிக்கு வராத நாட்களுக்கு HRA மற்றும்  போக்குவரத்துப்படி  அனுமதிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
GPFல் வட்டி கணக்கீடு மற்றும் பிடித்தத்தில் உண்டான தவறுகள் சரி செய்யப்பட்டுள்ளன.
உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கான குறைந்த பட்ச போக்குவரத்துப்படியான ரூ.1000/- வழங்கவும் அவர்களுக்கு வருமான வரிச்சலுகை வழங்கவும் உரிய திருத்தங்கள் ERPயில் செய்யப்பட்டுள்ளன.
எப்படியோ ERP இடியாப்ப சிக்கல்கள்
இனிதே தீர்ந்தால் சரிதான்...


No comments:

Post a Comment