.

Saturday, March 21, 2015

மார்ச் 21-
உலக வன நாள் மற்றும் மரங்களின் நாள்

 மழை பெய்த பிறகு மரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? புதிதாய் பச்சைப்பசேலென்று கும்மாளமிடும் குழந்தைகள் போல அவற்றைப் பார்ப்பதே மகிழ்ச்சி! ஏன் தெரியுமா? முதல் தூரல் விழுவதற்கு முன்பு வரை காற்றில் கலந்து வந்த மாசுக்களை வடிகட்டி தன்மேல் பூசிக்கொண்டு நல்ல காற்றை மனித குலத்திற்கு வழங்கிய கைமாறு கருதாத தொண்டால் தான்! அது மட்டுமா, ஒரு சராசரி உயரமுள்ள ஒரு மரம் இரண்டு குடும்பங்கள் வெளியிடும் கரியமில் வாயுவை உறிஞ்சிக்கொண்டு அதற்கு ப்திலாக ஆக்சிஜனை நமக்கு வழங்குகிறது.
இந்திய வனக்கொள்கை மூன்றில் ஒரு பங்கு காடாக இருக்க வேண்டும் என்கிறது. ஆனால், நடைமுறையில் 22 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளன. அந்தக் காடுகளை அழிப்பதிலும் காட்டின் காவலர்களான வனவாசிகளைக் காட்டைவிட்டே துரத்துவதிலும் பன்னாட்டு,உள்நாட்டு முதாலாளிகள் குறியாக உள்ளனர்.
மரங்கள் குறைவதால், ஆக்சிஜன் பற்றாக்குறை, மழைக்குறைவு, பெருகும் நோய்கள், மாசுக்கட்டுப்பாட்டுக்கு ஆபத்து என பலப் பல பிரச்சனைகள்!
ஒரு காலத்தில் DET அலுவலகம் என்றழைக்கப்பட்ட கோட்ட அலுவலகம் முன்பு ஒரு படை தங்கும் விசாலம் மிகுந்த ஒரு தூங்குமூஞ்சி மரம் இருந்தது…. அதன் பிறகு நேற்று வரை ஒரு சில அசோக மரங்கள் இருந்தன….

ஏன் மொட்டையாய் நிற்கிறீர்கள்?
மரங்களைக் கேட்டோம்
ஒரு மரம் சொல்லியது
”வன நாள் கொண்டாட பேனர் கட்ட வசதியாய் இருக்குமாம்”

இன்னொரு மரம் கூறியது
          ”அலுவலகர்கள் சுவாசிக்க பிராணவாயு மையம் திறக்கும் போதும்                நாளை திறப்பு விழா பேனர் கட்டலாமே…..?

No comments:

Post a Comment