காயிதே
மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் நல்லகண்ணு, தீஸ்தா
சீதல்வாட்டுக்கு காயிதே மில்லத் விருது: கோபாலகிருஷ்ண காந்தி வழங்கினார்
அரசியல்
மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது கம்யூனிஸ்ட் மூத்த
தலைவர் ஆர்.நல்லகண்ணு, மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் ஆகியோருக்கு வழங்கப் பட்டது.
காந்தியடிகளின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி இந்த விருதுகளை வழங்கினார்.
காயிதே
மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல் மற்றும் பொது வாழ்வில்
நேர்மையாக பணியாற்றிய வர்களுக்கான காயிதே மில்லத் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட்
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில்
நேற்று நடைபெற்றது. இருவருக்கும் விருதினை மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்க
முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி வழங்கினார். விருது பெற்ற இருவருக்கும்
பரிசுத்தொகையாக ரூ.5 லட்சம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்
கோபால கிருஷ்ணகாந்தி பேசியதாவது:
இந்தியாவின்
ஒருமைப் பாட்டுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்த ஒவ்வொருவரும் தியாகம்
செய்துள்ளனர். இதில் நல்லகண்ணு மிகவும் முக்கிய மானவர். சிபிஐ மற்றும் சிபிஎம்
கட்சிகள் ஒன்று சேர வேண்டும். நல்லகண்ணுவுக்கும் தீஸ்தா சீதல்வாட்டுக்கும் விருதை
அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு
அவர் பேசினார்.
இந்திய
கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ‘தி இந்து’விடம் கூறும்போது, “எனக்கு கிடைத்த இந்த விருதை நான் சார்ந்த கட்சிக்கு கிடைத்த விருதாகவே
கருதுகிறேன். தேசத்தின் ஒற்று மைக்காக பெரிதும் உழைத்த காயிதே மில்லத் பெயரில்
விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
தீஸ்தா
சீதல்வாட் கூறும்போது “காயிதே மில்லத் பெயரில் தமிழகத் தில் விருது பெறுவதை பெருமை யாக
கருதுகிறேன். தமிழகத்தில் கவுரவக் கொலைகள் மற்றும் சாதிய வன்முறைகள் நடக்கின்ற
நிலை மாற வேண்டும்” என்றார்.
காயிதே
மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் தாவூத் மியாகான்
பேசும்போது, “அரசியல் வாழ்வில் நேர்மை என்றதும் விருதுக்கான தேர்வுக்குழு
நல்லகண்ணுவின் பெயரைத்தான் முதலில் பரிந்துரை செய்தது. அதேபோல், பெண்மணி
ஒருவருக்கு விருது வழங்க வேண் டும் என்ற போது, குஜராத்
கலவரத் தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக் காக போராடிய மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா
சீதல்வாட் தேர்வு செய்யப்பட்டார்” என்றார்.
தேர்வுக்குழுவில்
இடம்பெற்றி ருந்த மத்திய அரசின் முன்னாள் செயலர் மூசாரஸா, கல்வியாளர்
வசந்தி தேவி, பேராசிரியர் அ.மார்க்ஸ், பிஷப் தேவசகாயம், கேப்டன்
அமீர் அலி மற்றும் தமிழ் நாடு தலைமை காஜி சலாஹுதீன் முகம் மது அயுப் சாஹிப்,
ஜவாஹிருல்லா எம்எல்ஏ உள்ளிட் டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
.நன்றி!
No comments:
Post a Comment