.

Monday, May 11, 2015

செயலகக்கூட்டம்

கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட அளவிலான செயலகக்கூட்டம் 09-5-2015 சனிக்கிழமை மாவட்டத்தலைவர் தோழர்.R.செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலசங்க துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன், மாவட்ட செயலர் தோழர். இரா.ஸ்ரீதர், மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசங்க நிர்வாகிகள், மற்றும் முன்னணித் தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

செயலகக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

  •   மாவட்டத்தில் அனைத்துகிளைகளிலும் பொதுக்குழுவை   உடனடியாகக் கூட்டுவது. அதில் ஊழியர் பிரச்னைகளை பேசித் தீர்வு காண்பது.
  •  சிரில் அறக்கட்டளை கூட்டத்தை ஜுன் மாதத்திற்குள் நடத்துவது.
  •   சிரில் அறக்கட்டளை நிதியை மாவட்ட சங்கத்திடம்  ஒப்படைப்பது குறித்து  மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் அவர்கள்  சம்மேளன செயலர் தோழர்.G.ஜெயராமனுடன் பேசுவது எனவும்,
  • அமைப்பை பலப்படுத்த அனைத்து கிளைதோறும் தோழர்களை சந்திப்பது.
  • திருக்கோவிலூர் உட்பகுதி மாற்றல் பிரச்சனை, மாவட்ட சங்க அலுவலகத்திற்கு BROADBAND வசதி, மாவட்ட உதவிசெயலர் தோழர்.குழந்தைநாதன் அவர்களுக்கு தொழிற்சங்க ரீதியிலான மாற்றல் பெறுவது குறித்த பிரச்சனைகளின்பால் விரைவில் தீர்வு ஏற்படாவில்லையெனில் இந்த மாதம் இறுதிக்குள் உண்ணாவிரதம் மேற்கொள்வது.


தோழமையுடன்.
இரா.ஸ்ரீதர்

மாவட்ட செயலர்








No comments:

Post a Comment