.

Sunday, May 24, 2015

திட்டக்குடி கிளை மாநாடு மற்றும்
தோழர் A.சுப்பிரமணியன் பணி ஓய்வு பாராட்டு

23-05-2015 அன்று நடைபெற்றது. மாநாட்டில் மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் பண்ருட்டியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு சற்று தாமதமாக கிளை மாநாட்டில் கலந்துகொண்டார். தனது வாழ்த்துரையில் மாவட்ட சங்க செயல்பாடு மற்றும் குறைபாடுகள் ஆகியவற்றை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். மாவட்ட துணைத்தலைவர் தோழர் S.அன்பழகன் உடன் கலந்துகொண்டார். சம்மேளன செயலர் தோழர்.G.ஜெயராமன்,
மாநிலப்பொருளர் தோழர்.K.அசோகராஜன், மூத்தத் தோழர் T.ரகு
ஆகியோரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment