.

Tuesday, June 23, 2015

சிதம்பரம் கேபிள் பழுது 

சிதம்பரம் நகர பகுதியில் நகராட்சி கழிவு நீர் வாய்க்கால் தோண்டும் போது  நமது 1600 pair அளவுகொண்ட கேபிள் துண்டிக்கப்பட்டு பல தொலைபேசி இணைப்புகள் செயல் இழந்தன. நிர்வாகம் உடனடியாக சரிசெய்யும் பணியை துவங்கியது. சரி செய்யும் பணியில் (21-6-2015) ஞாயிறு விடுமுறை நாளென்றும் பாராமல் நமது ஒப்பந்த ஊழியர்கள் தோழர்கள் சத்யராஜ், மதி,நாகராஜன் ஆகிய மூன்று பேர் மற்றும் அந்த பகுதி டெலிகாம் மெக்கானிக் தோழர்.T.ராஜேந்திரன்  ஆகியோர்  கேபிள் ஜாயின்ட் பணியில் ஈடுபட்டு சரிசெய்தனர். இத் தோழர்களுக்கு நமது மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். (1600 pair அளவு கொண்ட இக் கேபிள் ஒரு சில இடங்களில் மட்டுமே போடப்பட்டிருக்கும். இக் கேபிள் தற்போது விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்           திரு.பன்னீர்செல்வம், SDE அவர்கள் முயற்சியில் போடப்பட்டது)
  
இப்பகுதியில் கேபிள் பகுதியில் பணிபுரிவதற்கு ஏற்கனவே மேலும் சில ஒப்பந்த ஊழியர்களை நிர்வாகத்திடம் கோரியிருந்தோம். ஆனால் நிர்வாகம் நமது கோரிக்கையை ஏற்கவில்லை. இது போன்ற அவசர காலத்தில் கூடுதலாக பணிபுரிவதற்கு ஏதுவாக இருந்திருக்கும். இருப்பினும் குறைந்த ஒப்பந்த ஊழியர்களை கொண்டே கேபிள் பழுதை சரிசெய்துள்ளனர். நமது வாழ்த்துக்கள்


நிர்வாகம் இனியாவது கூடுதல் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும் என நம்புகிறோம்!!!



No comments:

Post a Comment