இணைந்து முறியடிப்போம்!!
ஏப்ரல் 21,22 ஆகிய இரண்டு நாள் நடைபெற்ற வேலைநிறுத்தம் தமிழகத்தில் வெற்றிகரமாக
நடைபெற்றது. இந்த வேலைநிறுத்தத்தை சீர்குலைக்கும் வகையில் அமுதவாணன் என்ற நபர் சிலருடன் சேர்ந்து நமது கூட்டமைப்பு கன்வீனர் தோழர் S.செல்லப்பா, தலைவர் தோழர். R.பட்டாபி உள்ளிட்ட ஐந்து பேர் மீது காவல்துறையில் பொய்புகார் அளித்தனர்.
இதனை
கண்டித்து 29-04-2015 சென்னையில் மாநிலம் தழுவிய பெருந்திரள் உண்ணாவிரதம் மேற்கொண்டோம்.
அதன் அடிப்டையில் பேச்சுவார்த்தை நடைபெற்று காவல்துறை நடவடிக்கையை முறியடித்தோம்.
அனால் யாரோ சிலரது தூண்டுதலின் பேரில் மீண்டும் நமது கூட்டமைப்பு தலைவர்கள் மீது செய்த
புகாரின் அடிப்படையில் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
இத்தகைய செயலை கடலூர் மாவட்ட சங்கம்
வன்மையாக கண்டிக்கிறது..
இதனை கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு கடலூர்
மாவட்ட சங்கம் முன்னிற்கும்....
No comments:
Post a Comment