.

Sunday, July 5, 2015

செயலகக் கூட்டம் 4-7-2015

செயலகக் கூட்டம் 4-7-2015 அன்று  மாலை மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்டத்தலைவர் தோழர்.R.செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மூத்தத் தோழரும், TMTCLU மாநில  இணைப் பொதுச்செயலருமான தோழர் S.தமிழ்மணி, மாநிலத் துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன், மாவட்ட,கிளைசங்க நிர்வாகிகள் மற்றும் TMTCLU மாவட்ட தலைவர். தோழர்.M.S.குமார், TMTCLU மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜு உட்பட முன்னணித் தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர். மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மாவட்ட சங்க செயல்பாடுகள், பிரச்சினை தீர்வு, எடுக்கப்பட்டுள்ள பிரச்னைகள் மற்றும் EOE டெண்டரில் உள்ள பிரச்சனைகள் ஆகியவற்றை பற்றி விளக்கிப்பேசினார்.

கூட்டத்தில்,
  • 8-7-2015 அன்று தர்மபுரியில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பெருமளவில் கலந்துகொள்வது எனவும்,
  • கடலூரில் 15-7-2015 அன்று நடைபெறும் சிரில் அறக்கட்டளை நடத்தும் 16-ம் ஆண்டு தமிழுக்கு ஊக்கம் பரிசளிப்பு விழாவை சிறப்பாக நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
  • மேலும் மாவட்டத்தில் பல பகுதிகளில் நடைபெற்ற ஊழியர்கள்/அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நிர்வாகம் விரைந்து முடிக்க வலியுறுத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.  





No comments:

Post a Comment