கலந்தாய்வுகூட்டம்-விழுப்புரம்
BSNL வளர்ச்சிக்காக அதிகாரிகள் மற்றும்
ஊழியர்கள், ஊழியர்கள்/அதிகாரிகள் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுகூட்டம்
03-07-2015 அன்று
மதியம் விழுப்புரத்தில் நடைபெற்றது. அதிகாரிகள் மற்றும் சங்க பிரதிநிதிகள் மற்றும்
ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர். மாவட்ட சங்கங்களின் சார்பில் நமது மாவட்ட
செயலர் இரா.ஸ்ரீதர், தோழர்கள்
K.T.சம்மந்தம்-BSNLEU, R.ஜெயபால்-FNTO, P.செந்தில்குமரன்-SNEA, வெங்கடேசன்-AIBSNLEA
ஆகியோர் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
ஊழியர்கள் தரப்பிலும் தங்களது கருத்துக்களை கூறினர். அதே சமயம் மற்ற இடங்களில் நடைபெற்ற
கூட்டத்தில் ஊழியர்கள் தங்களது கருத்துகளை தயக்கமில்லாமல் பகிர்ந்துகொண்டது போல்
விழுப்புரத்திலும் பலர் தங்களது கருத்துக்களை கூறியிருந்தால் இக்கூட்டம் மேலும்
சிறப்பாக அமைந்திருக்கும்.
No comments:
Post a Comment