திரு.ஸ்ரீநிவாசன்
CAO(finance) பிரிவுபசார விழா
திரு.ஸ்ரீநிவாசன்
CAO(finance) அவர்கள் தனது சொந்த விருப்ப மாற்றலில்
சென்னை செல்கிறார். GM அலுவலக கணக்கு பிரிவு ஊழியர்களின்
ஆதரவுடன் GM அலுவலக மூன்றாம் தளத்தில் பணிபுரியும்
ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரிவுபசார விழாக்கூட்டத்தில் நமது மாவட்ட செயலர்
இரா.ஸ்ரீதர் கலந்து கொண்டு மாற்றலில் செல்லும் திரு. ஸ்ரீநிவாசன் அவர்களை வாழ்த்தி
பேசினார். இவ்விழாவை நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 02-07-2015 மாலை 05-30 மணிக்கு GM அலுவலக நேரத்தில் அலுவலக செக்ஷனில் நடத்தாமல் நான்காம் தளத்தில் உள்ள
மனமகிழ் மன்ற வாயிலில் நடத்தப்பட்டது. நிர்வாகத்தின் உணர்வை நாம் புரிந்துகொண்டு
நடந்தது போல், நிர்வாகமும் நமது உணர்வை
புரிந்துகொண்டு செயல்படும் என நம்புகிறோம். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திட்ட நமது இளையத் தோழர். A.S.குருபிரசாத் –க்கு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment