.

Thursday, July 30, 2015

GM அலுவலக்கிளை பொதுக்குழு

இன்று (30-07-2015) GM அலுவலக்கிளை பொதுக்குழு கூட்டம் தலைவர் தோழர் D.துரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர். P.ஜெயராஜ் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளை விளக்கினார் மேலும் அவர் சில பொதுத்துறைகளுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்படாமலிருக்கிறது. NLC ஊழியர்களுக்கு 2007 க்கு பிறகு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் அதனடிப்படையில் 2012 ல் வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்படாமலிருப்பதை கண்டித்து வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதுபோல் BSNL நிறுவனத்தில் BSNLEU வின் தவறான ஊதிய உடன்பாட்டால் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை என்ற நிலை ஆனதால் நமக்கு 2012 ல் கிடைக்கவேண்டிய ஊதிய மாற்றம் 2017க்கு தள்ளிப்போனது எனவும், மேலும் விபத்தில் படுகாயமடைந்த OFC TEAM தோழர்களுக்கு உதவி புரிந்த தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட பொருளர் தோழர்.A.சாதிக்பாஷா, மாவட்ட உதவி செயலர் தோழர் D.குழந்தைநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பணி ஓய்வுபெற்ற தோழர்களின் பாராட்டு விழா நடத்துவது எனவும், அவ்விழாவிற்கு தோழர்கள் ரூபாய் இருநூறு நன்கொடை அளிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. GM அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சுழல்மாற்றத்தை அவசியம் விரைந்து நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. தோழர் S.குருபிரசாத் நன்றி கூறினார். தோழர்கள், தோழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.







No comments:

Post a Comment