இன்று பணி ஓய்வு பெறும் தோழர்களுக்கு ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள்!!
தோழர் K. செல்வராஜ் STS. கடலூர்.
மாவட்ட அலுவலகக் கிளை சார்பில் பாராட்டு விழாவில் அனைத்து சங்கத்தினரும் பாராட்டினர்
தோழரின் ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துக்கள் !!!
தோழரின் ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துக்கள் !!!
----------------------------------------------------------------------------------
தோழர் K.பன்னீர் செல்வம் SDE- கடலூர்
ஒரு வேலையை ஒருவர் செய்து முடிக்க 10 நாட்கள் ஆகும் என்றால் 10 பேர்கள் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள் என கணக்குப் பாடத்தில் ஒரு கேள்வி உண்டு. ஒரே நாளில் முடித்துவிடுவர் என்பது பதில்
அந்த 10 பேர் குழுவிற்கு தோழர் பன்னீர் செல்வம் SDE டீம் லீடராக இருந்தால் பாதி நாளிலேயே சிறப்பாக முடிப்பது மட்டுமல்ல, பணி முடிந்த பிறகு மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் என்பது தோழமைக் கணக்கு.
அற்புதமான டீம் லீடர், சமீபத்திய கடுமையான விபத்திற்கு பிறகு குணமடைந்து வந்தார் என்றால் அதற்குக் காரணம் பணிக்காலமெல்லாம் அவர் விதைத்த தோழமை நட்பும் அன்புமே ஆகும், அவர்களின் நல்விழைவும் தோழரின் மன உறுதியுமேயாகும்,
அவரது பணி ஓய்வுக்காலம் சிறப்புடன் நலமுடன் அமைய வாழ்த்துகிறோம்!!!
---------------------------------------------------------------------------------------------------------
தோழர் V.சாம்பமூர்த்தி TTA. திண்டிவனம்
அதற்கு எடுத்துக்காட்டுதான் நமது தோழர் V.சாம்பமூர்த்தி TTA. அவர்கள். கேசுவல் மஸ்தூராகப் பணியில் சேர்ந்த அவர் தனது விடா முயற்சியால் உழைப்பால் TTA ஆக உயர்ந்து இன்று ஓய்வுபெறுகிறார்.
நேசத்திற்குரிய தோழரின் ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துக்கள் !!!
No comments:
Post a Comment