திண்டிவனம் கிளை
செயலர்கள் கருத்தரங்கம்-
மாவட்ட செயற்குழு
மயிலாடுதுறை மாநில செயற்குழு வழிகாட்டுதல்படி இன்று (19-10-2015)
திண்டிவனம் ராஜ்மஹால் திருமணமண்டபத்தில் கடலூர், புதுவை மாவட்டங்களின் இணைந்த
மாவட்ட செயற்குழு மற்றும் கிளைச்செயலர்கள் கருத்தரங்கம் தோழர்கள் R.செல்வம்,M.தண்டபாணி
ஆகிய இரு மாவட்ட தலைவர்களின் கூட்டுத்தலைமையில்
நடைபெற்றது. திண்டிவனம் கிளைத்தலைவர் தோழர்.G.ஜெயச்சந்தர்
கவிதை நயத்துடன் திண்டிவனத்தின் வரலாற்றைகூறி வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். கடலூர் மாவட்ட உதவித்தலைவர் தோழர் P.அழகிரி
அஞ்சலியுரையாற்றினார். புதுவை மாவட்ட செயலர் தோழர் M.செல்வரங்கம்
புதுவை மாவட்ட மாநாடு நிகழ்வுகள், வருகின்ற ஊழியர் சரிபார்ப்பு தேர்தலில்
மாவட்டத்தில் அனைத்து ஊழியர்களையும் அணுகி புதுவையில் அதிக வாக்கு வித்தியாசத்தில்
வெற்றிபெற நாம் செய்ய வேண்டியவற்றை
விளக்கி பேசினார். பிறகு கடலூர் மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் “கடலூர்
மாவட்டத்தில் சென்ற சரிபார்ப்பு தேர்தலைவிட நமது சங்கம் கூடுதலாக வாக்குகள் பெற
அனைத்து மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள் அனைவரும் இன்று முதல் நமது பணியை துவக்க
வேண்டும் என்றும், அதற்காக நாம் கடுமையாக உழைத்து நமது சங்கத்தை முதன்மை சங்கமாக்க
பாடுபட வேண்டும்” என வலியுறுத்தி பேசினார். பின்னர் இரு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட,
கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணித் தோழர்கள் ஆகியோர் தங்களது கருத்துக்களை
எடுத்துரைத்தனர். மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன்
அவர்கள் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தார். பின்னர் மத்தியசங்க சிறப்பு
அழைப்பாளர் தோழர்.P.காமராஜ் இந்தியா முழுவதும் உள்ள சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை,
அதில் நாம் பெறவேண்டிய எண்ணிக்கையின் அவசியத்தை விளக்கி மத்திய சங்க செயல்பாடுகள்,
அண்மையில் நடைபெற்ற மத்திய கவுன்சில் கூட்ட முடிவுகள் பற்றி விளக்கி பேசினார். திண்டிவனம்
தோழர்.V.குப்பன் (மாவட்ட உதவித்தலைவர்) நன்றி தெரிவித்தார்.
இணைந்த செயற்குழு
தீர்மானங்கள்:
1. 2016-ல் நடைபெற
உள்ள அங்கீகாரத் தேர்தலில் நமது சங்கத்தை முதன்மை சங்கமாக ஆக்குவதற்கு நாம்
அனைவரும் சேர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். 2007-ல்
ஊதியக்குழுவில் நாம் இழந்தவற்றை, 2017-ல் (ஊதியக்குழுவை பெறுவதற்கும்) மீண்டும்
பெறுவதற்கும் மாவட்ட செயற்குழு அனைத்து தோழர்களையும் கேட்டுகொள்கிறது.
2. பண்ருட்டி கிளையில் இரண்டு தோழர்களும் 24-10-2015-ல்
பண்ருட்டி கிளை மாநாடு நடத்துவதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். மாவட்ட சங்கம்
கிளை மாநாட்டை ஒற்றுமையாக நடத்துவதற்கு முயற்சித்து வருகிறது. ஆகவே 24-10-2015-ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பண்ருட்டி கிளை மாநாட்டை நிறுத்தவேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது. இரு
தரப்பும் சுமூக சூழ்நிலை உருவாக்கிட பேச்சு வார்த்தை நடத்திட ஒத்துழைக்குமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment