.

Thursday, October 1, 2015

நமது தமிழ் மாநில செயற்குழு
23/09/2015 அன்று
மயிலாடுதுறையில் மாநிலத்தலைவர்
தோழர்.இலட்சம் அவர்கள்
தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.

பணி நிறைவு  பெற்ற
மாநிலத்தலைவர்.இலட்சம்
அகில இந்தியச்செயலர். தோழர்.கோபால கிருஷ்ணன்
சிறப்பு அழைப்பாளர். தோழர். கிருஷ்ணகிரி முனியன்
மாநில உதவித்தலைவர். தோழர். திருச்சி மனோகரன்
ஆகியோரின் சங்கப்பணி வெகுவாகப் பாராட்டப்பட்டது.

மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி
நடந்து முடிந்த வேலை நிறுத்தங்கள்
BSNL புத்தாக்கப்பணிகள்
செல்கோபுரங்கள் பிரிப்பு
அகன்ற அலைவரிசைப் பழுது நீக்கத்திற்கு தனியார்  அனுமதிப்பு..
பல்வேறு ஊழியர் பிரச்சினைகள்
மற்றும் வரவிருக்கும் ஊழியர் சரிபார்ப்பு
ஆகியன பற்றி தமது கருத்துக்களை
தெளிவுபட, திறம்பட  எடுத்துரைத்தார்.
மாவட்டச்செயலர்கள், மாநிலச்சங்க நிர்வாகிகள்
மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தோழர்கள்.ஜெயபால்,சேது
ஆகியோரும் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
சிறிய பண்ருட்டி கிளைப் பிரச்சனையை காரணம் காட்டி நமது நண்பர்கள்  புறக்கணித்தனர். மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் மாற்று தீர்வை அளித்தும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் மாநில செயற்குழுவை புறக்கணித்து கலந்து கொள்ளாதது  வருத்தத்துக்குரியது.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன...
# வரும் 01/10/2015 - BSNL தினத்தை
கிளைகள் தோறும் கொண்டாடுவது.

# பகுதிவாரிக் கிளைச்செயலர்கள் கூட்டத்தை
அக்டோபருக்குள்  நடத்துவது.

# இந்த ஆண்டு தற்காலிகப் போனஸ் பெற
முழு முயற்சிகள் மேற்கொள்வது..

# TTA மற்றும் TM இலாக்காத்தேர்வு எழுத
நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியை தளர்த்துவது.

# JAO காலியிடங்களில் தேர்வு பெற்ற தோழர்களுக்கு
தற்காலிகப் பதவி உயர்வு வழங்குவது...

# மாநில மாநாட்டை வேலூர்,சேலம் அல்லது
கடலூர் மாவட்டங்களில் நடத்துவது..


வாழ்த்துக்களும்... பாராட்டுக்களும்..






No comments:

Post a Comment