அமைப்பு நலன் கருதி ஒரு வேண்டுகோள்…..
பொக்கையால போச்சாம் பொரிமாவுங்கற கதையா ஒவ்வொரு மாநில செயற்குழுவையும் புறக்கணிக்க ஒரு நொண்டிச் சாக்கு
நம்முடைய மாவட்டச் செயலர் ஸ்ரீதர் மாநிலச் செயற்குழுவைப் பற்றி எழுதும் போது ‘சிறிய பண்ருட்டி கிளை பிரச்சனையைக் காரணம் காட்டி நண்பர்கள் புறக்கணித்தனர்… என எழுதி விட்டாராம்.
எனவே நான் சொல்கிறேன் என்ன காரணம் என்று கோவை மாவட்டச் செயலரும், மாநில உதவிச் செயலருமான தோழர் எல்.
சுப்புராயன் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.
இன்னும் நிறைய கேள்விகளுக்கு அவர் விடையளிக்க வேண்டியிருக்கிறது,
1, முதலில் மயிலாடுதுறை மாநிலச் செயற்குழுவை அவர் புறக்கணித்தது மாநில உதவிச் செயலர் என்ற வகையிலா அல்லது கோவை மாவட்டச் செயலர் என்ற முறையிலா?
2, அவர் மாவட்டச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது – ஒருமனதாக, கருத்தொற்றுமை அடிப்படையில்
எவ்வாறெனில், தோழர் ஜெகன் வழியில் ,,, அது. பிரச்சனை எவ்வளவுதான் இருந்தாலும் அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒருசிறு புள்ளியிலிருந்து செயல்படத் தொடங்குவது என்பதுதான். மாறாக, நான் சொல்லும் இந்த இரண்டு கோரிக்கைகைகளை ஏற்றுக் கொண்டால்தான் ஒற்றுமை என்பது LCM மும் (மீச்சிறு பொது மடங்கு) அல்ல, ஜெகன் வழியும் அல்ல. அது அமெரிக்க ஏதேச்சிகாரம் கடைபிடிக்கும் ‘வீட்டோ’ பெரியண்ணன் போக்கு.
3. ஒன்றைத்
தெளிவுபடுத்தி விடுவோம்.
பண்ருட்டி
கிளைச் செயலரை நீக்கியது கடலூர் மாவட்ட சங்கம் அல்ல.
செப்டம்பர் 27 அகில இந்திய பொதுவேலைநிறுத்தம் தொடர்பாக அனைத்து சங்கங்களின் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தமாட்டேன் என அன்றைய பண்ருட்டி கிளைச்செயலர் அமைப்பு நலங்களுக்கு மாறாக நடந்து கொண்டதால் பண்ருட்டிக் கிளைத் தோழர்கள் கிளைத்தலைவர் தலைமையில் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டி கிளை உதவிச் செயலரைக் கிளைச் செயலராகத் தேர்ந்தெடுத்தனர். கடலூர்
மாவட்ட சங்கம் அதனை அங்கீகரித்ததே தவிர – கிளைச் செயலரை நீக்கவில்லை.
அத்தகைய
உயர்ந்த பட்ச அதிகாரம் (அல்லது, கிளைச்
செயலரை நீக்கு என திருப்பூரிலிருந்து மாநிலச்செயலருக்குக் கடிதம் எழுதத்தூண்டக்கூடிய குறைந்தபட்ச ஜனநாயக அதிகாரம்) இருப்பதாகவும் கடலூர்
மாவட்ட சங்கம் கருதவில்லை,
4. வேலூரில் சிறப்பு
அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டதற்காக புறக்கணிப்பு. சென்னையில்? STR பிரச்சனை. அது இரண்டு மாநில சங்கங்கள் சம்பந்தப்பட்டது. அதை மத்திய சங்கத்தில் அல்லவா எழுப்ப வேண்டும்? அதுதானே அமைப்பு
முறை? அதை விடுத்து
அல்லது சிறப்பு விருந்தினரான தலைமைப் பொது மேலாளர் வரும் போதாவது அமைதி காத்திருக்க வேண்டாமா? குடும்பத்தில் அப்படித்தானே
நிகழும்? அப்படியா நடந்து
கொண்டீர்கள்?
(ஒரு விஷயத்திற்கு தோழர் சுப்புராயனுக்கு நன்றி தெரிவித்தே ஆக வேண்டும். ”சென்னையில் நடந்ததைப் போல மீண்டும் பிரச்சனை ஆகிவிடக்கூடாது” என்று ஒப்புக்கொண்டதற்காக. அது
நல்ல எண்ணம் என்று சொல்லிக் கொள்வதற்குக்கூட நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள் நாங்கள்).
’அகில
இந்திய சங்கமும் இப்பிரச்சனையைப் பேசித் தீர்ப்போம்’ என எழுதியுள்ளீர்களே அப்போது காத்திருப்பதுதானே முறை? சரி,
நீங்கள் எழுதியது உண்மையா? ஜெய்பூர் மத்திய
செயற்குழுவில் தமிழ் மாநில சங்கத்தின் நிலைபாட்டை மத்திய சங்கம் அங்கீகரித்துவிட்டதே, மேலும் சமீபத்திய டெல்லி மாநிலச் செயலாளர்கள் கூட்டத்திலும் ஒப்புதல் தந்தது மட்டுமல்ல STR-ஐ கார்ப்பரேட் அலுவலக
உத்தரவும் அங்கீகரித்து விட்டதே,
அது தெரிந்து தானே மீண்டும் பிரச்சனையாக்கி புறக்கணிப்புக்கு அதுதான் காரணம் என்கிறீர்களே நியாயமா?
அமைப்பு நலனைக் கருதியிருந்தால் --
பிரச்சனைகள்
எதுவும் விவாதிக்கத் தேவையில்லாத
ஒலிக்கதிர்
பொன்விழாவைப் புறக்கணித்திருப்பீர்களா?
அமைப்பு நலனைக் கருதியிருந்தால் --
NFTE பேரிக்கத்தின் வைரவிழாவைப் புறக்கணித்திருப்பீர்களா?
அமைப்பு நலனைக் கருதியிருந்தால் --
அங்கீகாரத்தேர்தலின் போது தனி அணியாகச் சுற்றுப்பயணம் செய்திருப்பீர்களா?
அமைப்பு
நலனைக் கருதியிருந்தால் --
ஓட்டுப்
பெட்டியில் வெள்ளைப்பேப்பர் போடப்பட்டிருக்குமா?
அப்படி
போட்டபின் அதைத் தவறென உணராமல்
அதுவெல்லாம் 49–ஓ என்ற விபரீத
வியாக்கியாணம் வந்திருக்குமா?
அமைப்பு நலனைக் கருதியிருந்தால் --
ஓங்கோல் மத்திய செயற்குழு வழிகாட்டிய பின்பும்
கடலூர் கிளையில் 11 புதிய உறுப்பினர்களைச் சேர்க்க மறுத்திருக்க முடியுமா?
அமைப்பு நலனைக் கருதியிருந்தால் --
கடலூர் மாவட்ட மாநாட்டிற்குபின் இன்னும்
கணக்குகள் முழுமையாக ஒப்படைக்கப்படாமல் இருக்க முடியுமா?
அமைப்பு நலனைக் கருதியிருந்தால் --
குறைந்த பட்சம் தஸ்தாவேஜுகள், பீரோ, மைக் முதலியன
ஒப்படைக்கப்படாமல் இருக்க முடியுமா?
அமைப்பு நலனைக் கருதியிருந்தால் --
மாவட்டசங்கத்தின் நிதி இலட்சக் கணக்கில்
வேறு அமைப்புக்கு மாற்றப்பட முடியுமா?
அமைப்பு நலனைக் கருதியிருந்தால் --
சம்மேளனச் செயலர் பணியாற்றும் மாவட்டத்தில்
தொடர்ந்து தவறுகள் திட்டமிட்டுத் தூண்டப்பட முடியுமா?
அமைப்பு நலனைக் கருதியிருந்தால் --
அடுத்த அங்கீகாரத் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில்
கடலூரில் மாவட்டத்தில் 4 பக்க சுற்றறிக்கை வெளியிடப்படுமா?
மாறாக,
அமைப்பு நலனை முன்னிறுத்துவதால் தான்,
தனிநபர் ஈகோ பார்க்காத காரணத்தால் தான்,
அமைப்பு விதிகளையும் ஜனநாயகத்தையும் மதிப்பதால் தான்,
புறக்கணித்தவர்களையும்
அடுத்தடுத்த இயக்க நிகழ்வுகளில்
புறக்கணிக்காது அழைத்திருக்கிறோம் !
ஆனால் தோழர் சுப்புராயன் அவர்களே!
தாங்கள் என்ன செய்தீர்கள், ஞாபகம் இருக்கிறதா?
‘கடலூர் மாவட்டச் செயலரைப் பணியிடை நீக்கம் செய்’
என கண்டன முழக்கம் செய்தீர்கள்
கடலூர் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு,
அப்போதும் நீங்கள் மாநில உதவிச் செயலர்.
யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம்?
கண்டன உரை மாநில உதவிச் செயலாளர்
ஆர்பாட்டத் தலைமை சம்மேளனச் செயலாளர்…
உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்
ஜனநாயகம், அமைப்பு நலன், அமைப்பு விதி,
ஈகோவைக் கைவிடுதல் . தவறில்லை
மெய்ப் பொருள் காண்பது அறிவாயிற்றே !
அமைப்பு நலனைக் கருதியிருந்தால் --
41 ஆண்டுகள் இலாக்காவிலும் இயக்கத்திலும்
பணியாற்றிய மூத்த தோழரின் பணிஓய்வு விழாவை
கடலூரில் புறக்கணித்திருக்க முடியுமா?
ஆனால் இதில் ஆதங்கப்பட ஏதுமில்லை
தோழர்
V. ரகுநாதன் SDE
இடதுசாரிச் சிந்தனை உள்ள உறுதியான தோழர் …
அனைவருக்கும் நல்ல நண்பர் …
அவரது பணிஓய்வு பாராட்டு, அதுவும்
NFTE
மாவட்ட சங்கம் அல்ல, நண்பர்கள் சார்பாக
அதையே புறக்கணிக்க வழிகாட்டியவராயிற்றே
நம்முடைய சம்மேளனச் செயலர்
நடைமுறை இவ்வாறு இருக்கையில்
கே,ஜீ. போஸ் அணியினர் நம்மோடு இருந்தபோதும் கூட
என்று எழுதுகிறீர்களே
அவர்கள் உடன்பட்டு இல்லாவிட்டாலும்
அமைப்பில் (நம்மோடு) இருந்தார்கள்
என்பதை உணர்வீர்களா?
9/11
என்பது இரட்டை கோபுர தகர்ப்பின் அடையாளம் மட்டுமில்லை
நமது மாநில சங்க நிர்வாகிகள் தேர்வான
9/11
என்பது உங்கள் மீது வைத்த நம்பிக்கையின் அடையாளம்
அதை நம்பிக்கை தகர்ப்பின் அடையாளம் ஆக்கிவிடாதீர்கள்
குறைந்தபட்ச கோரிக்கை ஒன்றுதான் தோழரே
உங்களுக்குச் சரியென்று பட்டதை
உள்ளே வந்து சொல்லுங்கள்!
புறக்கணிப்பு என்பது எப்போதும்
ஒரே ஆயுதமாக இருந்துவிட முடியாது
சக வாழ்வு சாத்தியம்
நீங்கள் நீங்களாகத் தொடரும் போது கூட!
இன்டர்நெட் யுகத்தில்
அந்தரங்கம் என்பதே தொலைந்து போகிறது என்கிறார்கள்
இதில் பொதுவெளியில் அலசுவது என்பது
மல்லாந்து படுத்து மார்மேல் உமிழ்வதாகும்
ஜெகன், குப்தா வழிகாட்டுதலை
பொதுவில் வைப்பது மட்டுமல்ல,
ஆத்ம சுத்தியாக சுயவிமர்சனம் செய்துகொள்வோம்!
அது நம் பொது நோக்கத்திற்கு ஆக்கம் தருவதாக அமையும்!
No comments:
Post a Comment