செயலகக்
கூட்டம்-முடிவுகள்
செயலகக்
கூட்டம் 6-10-2015 அன்று மாலை மாவட்ட
சங்க அலுவலகத்தில் மாவட்டத்தலைவர் தோழர்.R.செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மூத்தத் தோழரும், மாநிலத் துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன்,
மாவட்ட,கிளைசங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணித்
தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர். மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மாவட்ட சங்க
செயல்பாடுகள், பிரச்சனைகள், கும்பகோணம்
மாவட்ட மாநாடு, மாநிலசெயற்குழுக் கூட்டம், புதுவை மாவட்ட மாநாட்டு நிகழ்வுகள்
ஆகியவற்றை பற்றி விளக்கிப்பேசினார்.
கூட்டத்தில்,
செப்டம்பர்-2 வேலைநிறுத்ததில் கலந்து
கொண்டவர்களுக்கும்,
செப்டம்பர்-16 கடலூரில் நடைபெற்ற
டவர்களை தனி நிறுவனமாக ஆக்கும் மத்திய அரசைக்கண்டித்து நாடு தழுவிய
பெருந்திரள் தர்ணா போராட்டத்தில்
கலந்துகொண்டு வெற்றிகரமாக்கிய தோழர்,தோழியர்களுக்கும்,
மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநிலச்செயற்குழு,
கடலூரில் நடைபெற்ற மூத்த தோழர் K.செல்வராஜ் பாராட்டு
விழா, புதுவை மாவட்ட மாநாடு ஆகியவற்றில் கலந்து கொண்டு சிறப்பித்த
தோழர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் புதுவை, கடலூர் மாவட்டம் இணைந்த
கிளைச்செயலர்கள் கருத்தரங்கை வருகின்ற அக்டோபர்19-ந்தேதி திண்டிவனத்தில்
சிறப்பாக நடத்துவது என்றும்,
வருகின்ற ஊழியர் சரிபார்ப்பு தேர்தலில் நமது
சங்கத்தை முதன்மை சங்கமாக ஆக்குவதற்கு நாம் நமது முழு உழைப்பை நல்க வேண்டும் எனவும்
முடிவெடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment