.

Thursday, December 10, 2015

நல்லதொரு துவக்கம், தலைவருக்கு நன்றி!

நாம் சற்று தாமதமாகத்தான் துவக்கினோம்வெள்ளம் பாதித்த நமது தோழர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்றுஉதவிகளை ஒருங்கிணைக்க நமது வலைப்பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தோம்ஒருசில நிமிடங்களில் மாவட்டச் செயலருக்கு அழைப்பு, பெங்களூரிலிருந்து ஒரு அதிகாரி உங்களது அறிக்கையைப் படித்தேன்அதில் வங்கிக் கணக்கு எண் இல்லையே என்றுஇவ்வளவு விரைவாகவா என நமக்கு ஆச்சரியம். புதிய உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் வங்கிக் கணக்கு எண்ணை அறிக்கையில் சேர்த்தோம்.

ரூபாய் ஐயாயிரம் கணக்கில் சேர்த்து விட்டேன். இந்தத் துடிப்பான குரல், துடிப்பான செயல்பாட்டுக்குச் சொந்தக்காரரான நமது தோழர் ஆர்.கே. அவர்களுடையதுஅறிக்கையைப் படித்து விட்டு நிவாரண உதவியை செலுத்திய பிறகுதான் தோழர் ஆர்.கே. நமக்குத் தகவல் தெரிவித்தார்நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி நமது முயற்சி பலரால் வரவேற்கப்படுகிறது என்பது மட்டுமல்ல, தலைவர் ஆர்.கே. அவர்களால் முதல் தொகை தந்து தொடக்கி வைக்கப்படுகின்ற ஆசியைப் பெற்றது என்பதுதான். நன்றி தலைவரே !

நமது செயல் ஆக்கபூர்வமாக அமையும் என்ற புதிய தெம்புடன் நாம் தொடர்கிறோம், நாம் ஏற்றுள்ள கடமை மிகப் பெரிது என்பதை நன்கு உணர்ந்து

அணி வகுக்கும் உதவிகள். . .

தோழர் கணேசன் தலைமையில் தோழர் விஜய் ஆரோக்கிய ராஜ், பாலமுருகன் குழுவினரின் முயற்சியில் ஒரு லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் குடந்தை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளால்  அனுப்பி வைக்கப்படுகிறதுஎப்படி நன்றி சொல்வது எனத் தெரியாமல் நாம் திகைக்கிறோம்உங்களது தோழமைச் செயல்பாட்டை நெஞ்சில் பதிய வைத்திருப்போம் என்றென்றும் ,,,
 சென்னைத் தோழர் ரவிநாம் அறிக்கை வெளியிடும் முன்பே எதாவது நாம் செய்ய வேண்டாமா என உறங்கிய நம் உணர்வுகளை உசுப்பி விட்ட தோழர். அவரது முன் முயற்சியில் ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்புள்ள பொருட்கள் அணி வகுப்பில்நன்றி தோழரே ,,,

காரைக்குடி மாரி, சேலம் பாலகுமார், புதுச்சேரி செல்வரங்கன் உறுதி அளித்துள்ளனர், நன்றியோடு காத்திருக்கிறோம்,,,

முன்மாதிரியான அதிகாரி......

அதிகாரி என்றால் சார்ஜ் மெமோ கொடுப்பவர்கள் என நினைத்திருந்தது அந்தக் காலம்இவர் நம் காலத்து அதிகாரி, கலாம் மாதிரி !

திரு. ஸாஜூ ஜார்ஜ், நாகர்கோயில் மாவட்ட BSNL பொது மேலாளர்இவர் நன்கொடை வேண்டுகோள் அறிக்கையைத் தாமே வெளியிட்டு நாகர்கோயில் அனைத்து BSNL அதிகாரிகள் ஊழியர்களிடத்து திரட்டிய நன்கொடை ரூபாய் 1,65,400/=. இந்தத் தொகையை நாகர்கோயில் BSNL ஊழியர்கள் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சேர்ப்பித்துள்ளார்நாம் நெகிழ்ந்து பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம், அதிகாரியின் முயற்சிக்கும் கைகொடுத்த தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்!

இதோடு முடியவில்லை, ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்களை சென்னை நிவாரணத்திற்கு வாரி வழங்கியுள்ளனர்.

இந்த மாவட்டத்தின் நமது மாவட்டச் செயலாளர் வேறு எப்படி இருப்பார், தோழர் C. ஜோஸப் தனது பங்கிற்கு தனது கிராமத்திலிருந்து திரட்டிய லட்சக் கணக்கான நிவாரணப் பொருட்களைச் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தோழர்கள் அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

     

No comments:

Post a Comment