.

Friday, December 11, 2015

உங்களைக் குறித்து பெருமையாய் இருக்கிறது,
வாழ்த்துக்கள் தோழர்களே!
                நமது மாவட்டம் முழுவதும் மழை வெள்ளம்ஊழியர்களின் வீடுகள் போலவே நமது தொலைபேசியகங்களுக்கு உள்ளேயும் ஓடிய மழைநீர்ஜி எம் அலுவலகம்டிஆர்ஏ, கடலூர் மத்திய தொலைபேசி நிலையம், தொலைபேசி ஊழியர்கள் குடியிருப்பு பகுதி என பல இடங்களின் புகைப்படங்கள் முன்பே வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்துள்ளோம்.
                இதில் செஞ்சி தொலைபேசி நிலையமும் விலக்கல்லஅதன் பாதிப்புகளையும் கண்டோம்.
                இப்போது மழைநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பத் துவங்கியுள்ளது.
                நேற்றுதான் ஒரு வாடிக்கையாளருக்கு செஞ்சி சேவை மையத்திற்கு வரமுடிந்ததுதனக்கு தரைவழி இணைப்பும் பிராட் பேண்டும் வேண்டும் என்றார். அப்போது மணி மாலை 4.25  அவர் இணைப்பு கேட்ட பகுதியின் போன் மெக்கானிக் தோழர் கௌஸ்பாஷா  இணைப்பு தர சாத்தியமுள்ளது என்பதை உறுதி செய்த பின் வாடிக்கையாளரிடம் கட்டணம் பெறப்பட்டது.
            செஞ்சி வாடிக்கையாளர் சேவை மையத்தின் தோழர் Y.ஹாரூன்பாஷா TTA அதற்கான கம்யூட்டர் உத்தரவை உடனடியாகப் பிறப்பித்தார். பிறப்பித்த நேரம் மாலை 4.33 நமது தோழர்களின் அர்ப்பணிப்பு இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்தது,
                மாலை 5.26 மணிக்கு வாடிக்கையாளரின் வீட்டில் புதிய தொலைபேசி இணைப்பு, பிராட் பேண்டு வசதியுடன்  வேலை செய்யத் தொடங்கியதுஉத்தரவு கிடைத்த உடன் அதைச் செயல்படுத்தினார் போன் மெக்கானிக் தோழர்கள் R. இரவி, தோழர் A.R.கௌஸ்  பாஷா மற்றும் ஒப்பந்த ஊழியர் தோழர் P.ஆறுமுகம்.
                வரும் நாட்களில் அந்த இணைப்பைக் கொடுத்திருந்தால் அதில் பிழையேதுமில்லை, தாமதமில்லை, அலுவலக நடைமுறை மீறல் ஏதுமில்லை.
                ஆனால் அப்போதே ஒரு மணி நேரத்தில் கொடுத்தது தான், வாடிக்கையாளருக்கு மகிழ்ச்சி, நமக்கு பெரு நிறைவு.
                பொதுத் துறை ஊழியர்களின் செயல்பாடுகள் மக்களால் பாராட்டப்படும் இந்த வெள்ள நேரத்தில், செஞ்சித் தோழர்களே உங்களின் செயல்பாடும் அத்தகையதுதான், கோட்டை மீது பறக்கும் பதாகையாக பட்டொளி வீசிப் பறக்கிறது.
                இத்தகைய செயல்பாட்டிற்கு துணைநின்ற தோழர்கள் ஆறுமுகம் TTA, A.சேகர் TM , அதிகாரிகள் அனைவருக்கும் உளம் நிறை பாராட்டுகள்! வாழ்த்துக்கள்!

 =======================================================================

கடலூர் தோழருக்குப் பாராட்டு!!!
                கடலூர் பிரண்ட்ஸ் நகர் தொலைபேசியகத்திற்கு உட்பட்ட பகுதிதான் சாவடி. அந்த சாவடி பேருந்து நிறுத்தத்தின் அருகே அமைந்துள்ள பல நகர்களின் தண்ணீர் இன்னும் வடியாத சூழல்பல இடங்களில் பொக்லைன் மூலம் தோண்டப்பட்டு தேங்கிய மழைநீரை அனுப்ப முயற்சி இராப்பகலாக நடக்கிறதுசாவடி அருகேயும் அப்படி தோண்டினார்கள்.
                அருகே நமது கேபிள், பில்லர்அந்தப் பகுதியின் போன் மெக்கானிக் தோழர் V.ஷண்முகம் இரவு  இரண்டு மணி வரை அங்கேயே இருந்தார்காரணம் தண்ணீர் ஓடுகின்ற வேகத்தில் மண்அரிப்பு ஏற்பட்டு பில்லர் சரிந்து விழுந்து விடும் நிலைதோழர் ஷண்முகம் அருகிருந்து மணல் மூட்டைகளை அடுக்கி மற்றவர்களின் பணிகளின் ஊடாகவும் நமது பில்லரையும் காப்பாற்றி உள்ளார்பல இணைப்புகள் தொடர்ந்து இயங்கவும் பழுது ஏற்படாமலும் பாதுகாத்துள்ளார்.
வாழ்த்துக்கள் தோழரே!

குறிப்பு : இது போன்ற நிகழ்வுகள் உங்கள் பகுதியில் இருந்தால் அனுப்புங்கள்! பகிர்ந்து கொள்வோம் ! பாராட்டுவோம் !

No comments:

Post a Comment