.

Thursday, December 3, 2015


தேவை ஊழியர் நலனிலும்....

தற்போது பெய்துவரும் கனமழையில் கடலூர் மாவட்டமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கடலூரில் பெரும்பகுதிகள் வெள்ளத்தில் சூழப்பட்டுள்ளதுகடலூர் GM அலுவலகம்,TRA,கடலூர் மெயின் தொலைபேசி நிலையம், செஞ்சி தொலைபேசி நிலைய வளாகத்திலும் மழை வெள்ளம் சூழப்பட்டுள்ளது. சிதம்பரம்,கடலூர் பகுதியில் பல தோழர்களின் வீடுகளும் வெள்ளநீரில் சூழப்பட்டுள்ளது. மேலும் கடலூர் ஊழியர் குடியிருப்பிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது. மின்சாரமும்,தண்ணீர் வசதியும்  தடைசெய்யப்படப்பட்டு அங்குள்ளவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்ற வாரம் நிர்வாகத்திடம் மாவட்டசெயலர் எடுத்துரைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் நிர்வாகம் இந்நிலையிலும் EOI டெண்டரில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை குறைப்பதில் காட்டிய அக்கறையை இப்பிரச்னையில் காட்டவில்லை. இவ்வளவு நிகழ்வுக்குப் பின்னும் பொதுமேலாளர் அவர்கள் தொழிற்சங்கங்களையோ,  பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களையோ   இதுவரை சந்திக்காமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. இவ்வளவு வெள்ளம் பாதிக்கப்பட்ட  நிலையிலும் ஒப்பந்த ஊழியர்கள் குறைப்பு மட்டும் இன்று அமுலாக்கப்பட்டுள்ளது. ஆனால் பல    மாதங்களாக அரவிந்த் கண் மருத்துவமனைக்கான MOU மட்டும்   இதுவரை அமுல்படுத்தப்படவில்லை  நிர்வாகம் அதிகாரத்தை மட்டும் செலுத்தினால் மட்டும் போதாது. ஊழியர்களின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டியது கடமையாகும். 





No comments:

Post a Comment