.

Thursday, December 10, 2015

தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் நமது BSNL நெட்வொர்க் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைக்காண 09-12-2015 அன்று சென்னை வந்திருந்த நமது BSNL சேர்மன் திரு.அனுபவ்ஸ்ரீவத்சவா அவர்களை தமிழ்மாநிலஅதிகாரிகள்/ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் நேரில் சந்தித்து கொடுத்த கடிதத்தின் தமிழாக்கம்.


BSNL அதிகாரிகள் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ் மாநிலம்
 09—12—2015


பெறுநர்
சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர்,
BSNL புதுடெல்லி.

மரியாதைக்குரிய ஐயா,
பொருள்:        தமிழக மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் BSNL  சேவையை  மீண்டும் புனரமைத்தல் --  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
BSNL ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குதல் --- தொடர்பாக
•••    •••    •••
                ஐயா, தமிழகத்தின் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளையும் சென்னை நகரையும் நீங்களே நேரடியாகப் பார்வையிட வருகை தந்துள்ளதை மிகுந்த மரியாதையோடு பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்BSNL  சந்தாதாரர்களுக்கு சிறந்த தொலைத் தொடர்பு சேவையை அளிப்பதில் நீங்கள் காட்டும் உண்மையான முயற்சிகளுக்காக, தமிழகத்தின் BSNL  சந்தாதாரர்கள் சார்பிலும் ஊழியர்கள் சார்பிலும் நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்இது தொடர்பாக சில கருத்துகளை உங்களுடைய தகவலுக்காகவும்  மேலான பரிசீலனைக்கும் முன்வைக்கிறோம்.
        அனைத்திற்கும் மேலாக இந்த உறுதியை முதலில் நாங்கள் தருகிறோம்தமிழக BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் BSNL  சேவையை மேம்படுத்துவதில் கடுமையாக உழைத்து வருவது மட்டுமல்ல, BSNL கம்பெனியை ஒரு லாபம் ஈட்டும் நிறுவனமாக நிச்சயம் மாற்றிக் காட்டுவோம் எனவும் உறுதி தருகிறோம். தமிழகத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் BSNL சேவையை புனரமைப்பு செய்வதில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஓய்வின்றி, குறிப்பாக, கடலூர், வேலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில், கடுமையாகப் பணியாற்றி வருகின்றனர்பாதிப்படைந்த பகுதிகளில் மேலும் அர்ப்பணிப்போடு பணியாற்றி, சந்தாதாரர்கள் மகிழும் சேவையை அளிப்போம் எனவும் நாங்கள் உறுதி கூறுகிறோம்.
1.                    தங்களின் மேலான அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவையான ஸ்டோர் தளவாடப்பொருள்களையும் தேவையான நிதியையும் ஒதுக்கிடு செய்ய வேண்டுகிறோம்.
2.                   தமிழகத்தின் சில பகுதிகளில் NGN சேவை வழங்கப்பட்டுவருகிறது; அது, நல்ல பயனையும் தந்து வருவதைக் காண்கிறோம். எனவே ஐயா அவர்கள் NGN சேவையை தமிழகம் முழுவதும் விஸ்தரிக்க தகுந்த முன்முயற்சிகளையும் ஏற்பாடுகளையும் செய்து தருமாறு வேண்டுகிறோம்.
3.                   லீ்ஸ்டு லைன், இன்டர்நெட் இணைப்புகளின் BSNL கட்டண விகிதம் மற்றவர்களை விட ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளதுஇந்த கட்டணம் குறைக்கப்பட்டால் இந்த சேவையில் நம்மால் மேலும் சந்தாதாரர்களை ஈர்க்க முடியும்.
4.                  சமீபத்தில் நேசம் கோல்டு மொபைல் திட்டத்தில் எப்போதும் ரூ 200/= முழு டாக் மதிப்பு பெறும் சலுகை திரும்பப் பெறப்பட்டுள்ளதுசந்தாதாரர்களை மிகவும் கவர்ந்த திட்டமாக இது விளங்கியதுஎனவே  மீண்டும் அந்த சலுகை அமல்படுத்தப்பட வேண்டும்.
5.                   ரூ110 வவுச்சர் பெருமளவில் வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் முகவர்களிடமும் இருப்பு உள்ளதுஇதன் வேலிடிட்டி இம்மாத இறுதியில் முடிய உள்ளதுஎனவே ரூ110 வவுச்சர்களின் வேலிடிட்டி தேதி நீட்டிக்கப்பட வேண்டும்.

மேற்கண்டவைகளோடு ஊழியர் பிரச்சனைகள் சிலவற்றையும் தாங்கள் பரிசீலிக்க வேண்டுகிறோம்.

6.    சமீபத்திய கடும் மழை வெள்ளத்தில் பொது மக்களோடு BSNL ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்எனவே BSNL நிர்வாகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
7.    தமிழக தொலைத் தொடர்பு வட்டத்தில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் BSNL ஊழியர்களுக்கு, வெள்ள பாதிப்பு முன்பணம் (அட்வான்ஸ் குறைந்த பட்சம் ரூ.25,000/=) வழங்கிட BSNL நிர்வாகம் தேவையான நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகிறோம்.
8.    ஊழியர்களின் உடைமைகள், மோட்டார் வாகனங்கள், கம்ப்யூட்டர், குளிர் சாதனப் பெட்டிகள் மற்றும் மதிப்பு மிக்க வீட்டு உபயோகப் பொருட்கள் முதலிய பலவும், மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு கடும் இழப்புக்குள்ளாகி உள்ளனர். பல பொருட்கள் உபயோகிக்க முடியாதபடி கடுமையாகச் சேதமாகி உள்ளனஇதனால் முக்கியமாக தேவையானவற்றை வாங்கவும் பழுது நீக்கம் செய்துகொள்ளவும் ஊழியர்கள்  GPF முன்பணம் கோரலாம்எனவே நிர்வாகம் GPF முன்பணம் / திரும்ப எடுத்தல் கோரிக்கைகளை நிபந்தனை வரம்பு ஏதுமின்றி அனுமதிப்பது மட்டுமல்லாது GPF முன்பணம் தாமதமின்றி பெற போதுமான நிதியை உடனே தமிழக வட்டத்திற்கு வழங்க வேண்டும்.
9.    சில ஊழியர்கள் தங்கள் அனைத்து உடைமைகளையும் (டிவி, வாஷிங் மெஷின்,மிக்ஸி, கிரைண்டர், கட்டில் பீரோ முதலிய பல பல உடைமைகளையும் ) முற்றாக இழந்து தவிக்கின்றனர்எனவே அத்தகைய ஊழியர்களுக்கு மட்டும் வட்டி இல்லாத முன்பணமாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கிட வேண்டுகிறோம்,
10.  சென்னையின் பலபகுதிகள் மற்றும் கடலூர் SSA விலும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து சேவை மிகக் கடுமையாக பாதிப்படைந்ததுபல பகுதிகளில் போக்குவரத்து வசதி முற்றாக , குறிப்பாக டிசம்பர் 1 முதல் 5 வரை, தடைப்பட்டிருந்ததுபல ஊழியர்களின் வசிப்பிடங்கள் முற்றாக நீரால் சூழப்பட்டு யாரும் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டதுஇதனால் பல ஊழியர்களால் பணிக்கு வரமுடியாத சூழல். இந்நிலையிலும் தயக்கமின்றி பணிக்கு வந்து கடமையாற்றிய மற்றவர்கள் பாராட்டப்பட வேண்டும். வரமுடியாதவர்களுக்கு DP & AR OM No.28016/1/79 – Estt (A) தேதி 28-05-1979 உத்தரவுபடி தேவையான சிறப்பு விடுப்பினை தயவு செய்து வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறோம்,
நன்றியுடன்,
                                                                                                      தங்கள் உண்மையுள்ள,


No comments:

Post a Comment