.

Tuesday, December 8, 2015

தஞ்சை மாவட்ட BSNL தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!

  தஞ்சை மாவட்ட BSNL ஊழியர்கள்/அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து கடலூர் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தோழர் S.பிரின்ஸ் NFTE மாவட்டதலைவர் அவர்கள் தலைமையில் ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருள்களுடன் (17 பொருள்கள் அடங்கிய பை) தோழர்கள் T.பன்னீர்செல்வம், K.நடராஜன்.NFTE, V.வீரமணி-BSNLEU, C.துரையரசன்-AIBSNLEA, N.மேகநாதன், F.ஆரோக்கியதாஸ், V.ராஜேந்திரன், G.ராஜ்மோகன், M.லட்சுமணன், S.இளங்கோ, ஆரூர் சேகர், R.குணசேகரன்,
தோழியர் Tஉஷா-CTO, ஓட்டுனர் தோழர் M.சிவஞானம் மற்றும் தோழர். பிரின்ஸ் அவர்களின் மகள் தோழியர் P.பெரில், தோழர்.மேகநாதன் மகன் தோழர் M.சந்தோஷ் ஆகியோர் அடங்கிய  குழு சிதம்பரம் பகுதியை தேர்வு செய்து சட்டமன்ற உறுப்பினர் தோழர் K.பாலகிருஷ்ணன் அவர்களின் மூலம்  வழங்க சிதம்பரம் வந்தனர். அந்த தோழர்களை சிதம்பரம் பகுதி தோழர்கள் V.கிருஷ்ணமூர்த்தி-கிளைசெயலர், K.நாவு-கிளைத்தலைவர், D.ரவிச்சந்திரன் மாவட்ட உதவிசெயலர் ஆகியோர் வரவேற்று அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை உடனிருந்து செய்து கொடுத்தனர். சட்டமன்ற உறுப்பினர் வேறு பகுதி நிவாரண பணியில் இருந்ததால் அவரால் வரமுடியவில்லை. அவரின் ஆலோசனையின் படி அண்ணாமலை நகர் பகுதியை சார்ந்த CPM மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் S.ராஜா அவர்களின் மேற்பார்வையில் அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மையே நேரில் அழைத்து சென்று நிவாரணங்களை வழங்க ஏற்பாடு செய்தார். இதனால் சுமார் 250 பேர் பயன் பெற்றனர். தஞ்சை மாவட்ட BSNL நிர்வாகம் இலாக்கா கண்டைனர் லாரியை வழங்கி உதவியது. 
கடலூர் NFTE மாவட்ட சங்கம் சார்பாக தஞ்சை தோழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.











No comments:

Post a Comment