.

Monday, December 7, 2015

NFTE
தேசியத் தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனம்
கடலூர் மாவட்ட சங்கம்

கடலூர் புயல் மழை பேரிடர்
பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு உதவிட 
கனிவான வேண்டுகோள்

அன்புள்ள தமிழகத் தொலைத்தொடர்புச் சொந்தங்களே! நல்உள்ளங்களே!

உங்கள் அனைவருக்கும் கடலூர் தோழர்களின் வணக்கம்.

                முன்புதானேபுயல்இப்போது ஓரிரு நாட்களிலேயே கொட்டித் தீர்த்து தொடரும் மழைஆறுகள், ஏரிகளில் நிரம்பி வழிந்து கிராமங்களை மூழ்கடிக்கும் வெள்ளம்வீடுகளை இழந்து வாழ்வாதாரம் இழந்து வாடும் மக்கள்இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக தடம் புரண்டு விட்ட நிலைஇதற்கு நம் துறையில் பணியாற்றும் தோழர்களின் வீடுகளும் தப்பவில்லை. பல ஒப்பந்த ஊழியர்களின் குடும்ப நிலை மிகவும் மோசமாகி உள்ளது. சிலரின் வீடுகள் வெள்ளத்தில் முற்றிலுமாக இடிந்து தெருவில் நிற்கும் நிலை.

                ஏனெனில், விரிந்து பரந்த கடலூர் மாவட்டம் என்பது கடலூர்விழுப்புரம் தொலைத் தொடர்பு மாவட்டங்களை உள்ளடக்கியதுபல நூறு விவசாய கிராமங்கள், பல நூறு SAX சிறு தொலைபேசியகங்களை உள்ளடக்கியதுஅவற்றில் பணிபுரியும் பல நூறு தொலைத்தொடர்பு குடும்பங்கள். சிறிதும் பெரிதுமாக அனைவருக்கும் பாதிப்புகள்

                கடலூர் நகரில் உள்ள தொலைபேசிக் குடியிருப்புகளில் புகுந்த வெள்ளநீர் இன்னும் வடியாதது மட்டுமல்ல, மின்சாரமில்லை, குடிநீர் இல்லை என்ற நிலைமெயின் தொலைபேசியகம், கடலூர் ஆட்சித் தலைவர் பங்களா  அருகே நகரின் மையத்தில் அமைந்துள்ள பொது மேலாளர் அலுவலகம் என எங்கும் வெள்ளக்காடுநகரே இப்படி என்றால் கிராமங்களின் அவலம் சொல்ல வார்த்தைகளில்லை.

                இந்நிலையில் ஒரே ஆறுதல் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்துநாங்கள் உதவக் காத்திருக்கிறோம்என நமது தோழர்கள் தாமாக முன் வந்துள்ளதுதான்இது தொலைபேசித் தோழர்களின் வழிவழி வந்த மரபுஅதற்கு நாங்கள் தலை வணங்குகிறோம்வாட்ஸ் அப், முகநூல்களில் மக்கள் சாதி மதம் கடந்து உதவுகின்ற காட்சிகளை கண்ணீர் மல்கக் காண்கின்றோம்.

                பாதிக்கப்பட்ட நமது தோழர்களுக்கு உதவிட நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க கடலூர் மாவட்ட சங்கம் எப்போதும் போல களத்திலே முன்நிற்கிறதுஅதற்காக தோழர்களே உங்களிடம் பணிந்து இந்த அன்பு வேண்டுகோளை முன்வைக்கிறோம்.

                இயற்கை பேரிடரை எதிர் கொண்டு எழுந்து நிற்க உங்களால் இயன்றதை விரைவில் கடலூர் மாவட்ட சங்கத்திற்கு அனுப்பித் தாருங்கள்உதவி என்பது உரிய நேரத்தில் செய்ய வேண்டுவது என்பதால் உங்கள் உதவி உடன் வந்து சேரட்டும்அது பொருளாக இருக்கலாம், இதனை வாங்கித் தாருங்கள் என்ற உத்தரவோடு பண உதவியாக இருக்கலாம்உங்கள் உதவியின் பயன் தெரிந்த நாங்கள் அதனை பெரிதினும் பெரிதாகக் கருதி ஏற்கத் தயாராக உள்ளோம்,

                விழி நீர் துடைக்க விரையும் விரலாக, தாங்கிப் பிடிக்கும் ஆலம் விழுதாக, இடுக்கண் களையும் நட்பாக உங்களின் ஆதரவை வேண்டி,

தோழமை வாழ்த்துக்களுடன்,

NFTE கடலூர் மாவட்ட சங்கம்

தொடர்பு முகவரி :
NFTE கடலூர் மாவட்ட சங்க அலுவலகம்,
BSNL ஒருங்கிணைந்த சேவை வளாகம்,
ஆஸ்பத்திரி ரோடு,
கடலூர்-607001.
தொடர்பு தொலைபேசி எண்: 944 32 12 300

காசோலை மற்றும் நிதி அனுப்பவேண்டியது 
 NFTE-BSNL CUDDALORE .
யுகோ வங்கி, கடலூர் . 
வங்கி கணக்கு எண் 06200110023457 ,  IFSC CODE:- UCBA0000620 என்ற வங்கி கணக்கிற்கு வெள்ள நிவாரண நிதியினை தாரளமாக அனுப்புமாறு தங்களை கேட்டுக் கொள்கின்றோம்.


No comments:

Post a Comment