தமிழ் மாநிலசங்க அறிக்கையின்
தமிழாக்கம் 4-12-15
சென்னைவாசிகளுக்கு
அவர்களின் மனத்திண்மைக்கு செவ்வணக்கம்!!!
தமிழகத்திற்கோ சென்னைக்கோ பெரும் மழையும் புயலும் புதிதல்ல,.
ஏறத்தாழ
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை (1969, 1976, 1985, 1996, 1998,
2005, 2015) கடும் புயல் மழையைச் சந்தித்து வந்துள்ளது. ஆனால்
இம்முறை நூற்றாண்டு வரலாற்று நிகழ்வாக பெரும் மழைப்பொழிவைச் சந்தித்து அழிவுப் பகுதியாக மாறி உள்ளது சென்னை.
தமிழகத்தின்
கடலூர், புதுச்சேரி போன்ற பல மாவட்டங்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
பாதிப்பின்
போதுதான் உண்மை சொந்தங்களை அறிய முடியும்.
அந்தவகையில்
பலர் நம் வணக்கத்திற்கும் பாராட்டுக்கும் உரியவராகி உள்ளனர்.
இளைஞர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் மற்றும் தம் உயிரையும் பொருட்படுத்தாது பல்லாயிரம் மக்களைச் சாவின் முனையிலிருந்து காப்பாற்றிப் பாதுகாத்த மீட்புப் படையினர் என நம் வணக்கத்துக்குரியோர் பலர். சென்னை கார்பரேஷன்
பணியாளர்கள், சுகாதாரத்துறை, மின்துறைப் பணியாளர்கள், BSNL ஊழியர்கள் மிகச் சிரமமான பணி நிலைமைகளைச் சந்தித்த போதும் தத்தமது துறையின் சேவையினை மீட்பதில்/ மக்களுக்கு உதவுவதில்
தம்மால் இயன்றதனைத்தும் செய்தனர்.
“என்றும்
மக்களோடு இருப்போம், நெருக்கடிகளின் போது இன்னும்
உறுதியாக” என்பதை மீண்டும்
ஒருமுறை BSNL நிரூபித்தள்ளது.
சென்னை
மாநில தொலைத்தொடர்பு முதன்மைப் பொதுமேலாளர் மரியாதைக்குரிய
S.M. கலாவதி தொடங்கி களப்பணியாளர் வரை நம் நன்றிக்கும் வாழ்த்துதலுக்கும் உரியவர்களாகின்றனர். அவர்களது
ஈடுபாட்டோடு கூடிய பணியின் காரணமாகவே செல் சேவை மிக விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பியது. கூடுதல்
இடர்பாடுகளைச் சந்தித்து தரைவழித் தொலைபேசிகளையும் சீர் செய்தனர்.
இதே போன்று மாநிலத்தின் வேறுபல மாவட்டங்களும் திறம்பட செயல்பட்டன. குறிப்பாக, கடலூர் போன்று பல மாவட்டங்களில் தொலைத்தொடர்புச் சேவையை மீட்டுப் புனரமைப்பதில் தமிழ் மாநில முதன்மைப் பொதுமேலாளர் திருமதி. பூங்குழலி அவர்களின் வழிகாட்டுதலில் அந்தந்த மாவட்டங்களின் பொது மேலாளர்கள், அதிகாரிகள்—ஊழியர்களின் குழுக்கள், ஏனைய ஊழியர்கள்
மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றினர். அவர்கள்
அனைவரின் அர்ப்பணிப்பு உணர்வையும் உழைப்பையும் பெரிதும் பாராட்டுகிறோம்.
சென்னைவாசிகள் தம் நெஞ்சுரத்தை – இயற்கையின் தாக்குதல்களை / சீற்றங்களை எதிர்கொண்டு போராடிய தீரத்தை – எது வந்தபோதினும் நாம் வீழோம் என்று மீண்டும் வாழ்க்கையின் இயல்பு நிலைக்குத் திரும்பும் ஆற்றலை நிரூபித்துள்ளனர்.
சென்னை – வந்தாரை இன்னார் இனியார் என வேறுபடுத்தி அறியாது வாரி அணைத்துக் கொள்ளும் சென்னை; பெருகி வந்த வெள்ளத்தின் போதும் அதே பண்போடு ஒருவர்க்கொருவர் உதவிக் கொண்டதன் மூலம் தியாகத்தின் கதகதப்பை, பாதுகாப்பின் அரவணைப்பை
உணர்ந்தது. சாதி
மதம் ஏழை பணக்காரர் என்ற தடைச் சுவரையெல்லாம் தகர்த்தெறிந்து மனிதம் உயர்த்தியது.
இந்த நிலையில் நாம் ஒன்றை நினைவுபடுத்தியாக வேண்டும்.
சுற்றுச்
சூழலியல் அறிஞர்களின் எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. இடதுசாரி, பல்லுயிர் காத்தல் அமைப்பினர் உலகமயம் குறித்து எழுப்பிய அச்சம், சந்தேகம், எச்சரிக்கை, எதிர்ப்புகள் எல்லாம் புறக்கணிப்பட்டது. உலக ஏகாதிபத்திய
முதலாளித்துவம் ’எப்படியும் லாபம்’ என்ற தனது
கேடுகெட்ட நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள கொண்டு வரப்பட்டதே உலகமயம் என்ற எச்சரிக்கை புறந்தள்ளப்பட்டது,
’மேக் இன் இன்டியா’ என்று பெரும்
ஆரவாரத்துடன் கோஷம் எழுப்பப்படுகிறது. இது
இந்தியர் நலன்களை பலி கொடுத்தா என்று எல்லோரும் அச்சத்துடன் பார்க்க வேண்டியுள்ளது. ( டிசம்பர் 3, யூனின் கார்பைடு போபால் விஷ வாயு விபத்து நாள் இப்போது தான் அனுசரிக்கப்பட்டது – மொழியாக்க ஆசிரியர் இணைத்தது ).
’மேக்
இன் சென்னை” சென்னைவாசிகளின் நலன்களைப் பலிகொடுத்தா?
அரசாங்கங்கள் சென்னை போன்ற பெரு நகரங்களை முதலில் ஸ்மார் சிட்டிகளாக மாற்றட்டும், அதன் பிறகு 100 ஸ்மார்ட் சிட்டிகளைப் பற்றி யோசிக்கட்டும். நீராதாரங்கள்
திட்டம் ( குடிநீர், கழிவு நீர்
வெளியேற்றம், மழைநீர் வெளியேற்றம் முதலியன)– அவசரமாக முன்னுரிமை உடைய திட்டமாகட்டும். அந்தத் திட்டங்களை நகர மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் நடைமுறைப் படுத்தட்டும்.
இயற்கைத் தாக்குதலுக்கு உள்ளான நமது மாநில ஊழியர்கள் குறித்து அக்கறையோடு நலம் விசாரிக்கும் மத்திய தலைவர்கள் பல மாநிலத் தலைவர்களுக்கு நமது நன்றி.
அருமை அருமை தோழரே தாங்கள் கட்டளையிட்டால் கடலுர் வர தயாரக இருக்கின்றேன் நன்றி
ReplyDelete