.

Saturday, December 5, 2015

முதுநிலைப்  பொதுமேலாளருடன் சந்திப்பு

 இன்று(04-12-2015)ஊழியர்கள்/அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் முதுநிலைப் பொதுமேலாளருடன் சந்திப்பு நடைபெற்றது. நாம் ஏற்கனவே நமது உணர்வுகளை நமது இணையத்தில் பதிவு செய்திருந்தோம். நிர்வாகம் அதனை புரிந்துகொண்டு இன்றைய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது. முதுநிலைப் பொதுமேலாளரும் நமது உணர்வுகளை புரிந்துகொண்டு கடும் மழை வெள்ளத்தில் உழைத்திட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் தமது பாராட்டுக்களை தெரிவித்தார்.

  • நமது மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் அவர்கள் “களப்பகுதிகளுக்கு செல்லும்பொழுது ஊழியர்களை தாங்கள் சந்தித்தால் மிகவும் பயனுடையதாக அமையும்” என்று எடுத்துரைத்தார். முதுநிலைப் பொதுமேலாளர் அவர்களும்  அதனை  ஏற்றுகொண்டார்.


  • கடலூர் ஊழியர் குடியிருப்பு பகுதியில் கடந்த ஐந்து தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு தோழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் அதனை உடனடியாக சரிசெய்துதர கோரியிருந்தோம். எது சாத்தியமோ அதனை சரிசெய்து தர ஒப்புக்கொண்டு, இன்று மாலை மூன்று வீடுகள் தவிர மற்ற அனைத்து வீடுகளுக்கும்  மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது நிர்வாகத்திற்கு நமது நன்றி.


  • வெள்ள நிவாரண முன்பணம் உடனடியாக ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனக் கோரினோம். முதுநிலைப் பொதுமேலாளர் அவர்களும் விரைவில் அதற்கான விண்ணப்பம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

  • வெள்ளம் பாதித்த பகுதியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை பாராட்ட வேண்டும் என்ற நமது கோரிக்கையை முதுநிலைப் பொதுமேலாளர் ஏற்றுகொண்டார்.


  • செஞ்சி தொலைபேசி நிலையத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இடிந்த பழைய கட்டிட இடிபாடுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற நமது கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டு மாநில நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு அதனை அகற்ற விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என முதுநிலைப் பொதுமேலாளர் உறுதியளித்தார்.


  • முதுநிலைப் பொதுமேலாளர் அவர்கள் மழை நீர் புகுந்து பாதிப்புக்குள்ளான கடலூர் மெயின்தொலைபேசி நிலையம் சென்று அசாதாரண சூழலையும் பார்வையிட்டு, அங்குள்ள ஊழியர்களையும் சந்தித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.


  • மேலும் கடலூர் EOI-ல் உள்ள பிரச்சனையை வரும் திங்கள்கிழமை துணைப் பொதுமேலாளர் (நிர்வாகம்) நம்முடன் கலந்து பேச ஒப்புகொண்டுள்ளார். கூட்டத்தில் மாவட்ட செயலருடன் தோழர்.D.குழந்தைநாதன் ADS அவர்களும் உடனிருந்தார்.


துணைப் பொதுமேலாளர் (நிர்வாகம்) திரு.K.சமுத்திரவேலு அவர்களின் தலைமையிலான அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் குழுவினர்  கடலூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் மழைநீர் மேலும் புகாமல் பாதுக்காக்க மணல்மூட்டைகளை அடுக்கி போதிய பாதுகாப்புகளை மேற்கொண்டதற்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.



No comments:

Post a Comment