செயலகக்கூட்டம்
5-1-2016 அன்று மாலை 5.00 மணியளவில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் செயலகக்கூட்டம்
மாவட்ட தலைவர் R.செல்வம்
அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சாதிக்பாஷா, P.அழகிரி, D.குழந்தைநாதன், D.ரவிச்சந்திரன், A.ரவிச்சந்திரன் AC.முகுந்தன்
மற்றும் கிளைச்செயலர்கள் தோழர்கள் மலர்வேந்தன், E.வினாயக மூர்த்தி, S.மணி, V.கிருஷ்ணமூர்த்தி, S.ராஜேந்திரன், பழனிவேலு,
S.பாஸ்கரன், V.இளங்கோவன், பாலகிருஷ்ணன் மற்றும் TMTCLU மாவட்ட செயலர்
தோழர் G.ரங்கராஜு, மாவட்ட தலைவர் MS.குமார்
கிளைப் பொறுப்பாளர்கள் மற்றும்
முன்னணி தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர். மாநில துணைத்தலைவர்
தோழர் V.லோகநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலர் தோழர்
இரா.ஸ்ரீதர் மாவட்ட சங்க செயல்பாடுகள், சரிபார்ப்பு தேர்தலில் நாம் செய்ய வேண்டிய
பணிகள், வெள்ளநிவாரண பணியில் நாம் ஆற்றிய பணிகள் பற்றி விளக்கி பேசினார்.
கூட்டத்தில்..
- ஒப்பந்த ஊழியர்களுக்கான சம்பளப் பட்டுவாடாவை விரைவுபடுத்த வலியுறுத்துவது, மீதமுள்ள போனஸ் தொகையை பொங்கல் தினத்துக்குள் பட்டுவாடா செய்ய வலியுறுத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
- வருகின்ற ஜனவரி’8 அன்று கடலூரில் நடைபெறும் “SERVICE WITH A SMILE” நிகழ்ச்சியில் நமது தோழர்கள் திரளாக கலந்து கொள்வது,
- கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருள்களாகவும், பணமாகவும் அளித்த தஞ்சை, குடந்தை, காரைக்குடி,சென்னை, சேலம் மாவட்ட தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
- நமது தொடர் முயற்சியின் காரணமாக நீண்ட மாதங்களாக விடுபட்டிருந்த அரவிந்த் கண் மருத்துவமனையுடனான MOU தற்போது கையெழுத்தானது, அதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு நமது நன்றி தெரிவிக்கப்பட்டது.
- ஓய்வு பெற்ற விழுப்புரம் தோழர் S.வீரமணி TM அவர்கள் மாவட்ட சங்கத்திற்கு நன்கொடையாக ரூபாய் 500/- அளித்தார். மேலும் கடலூரிலிருந்து சென்னைக்கு மாற்றலில் செல்லும் தோழர் T.V. பாலு TM அவர்கள் ரூபாய் 500/ம், நெய்வேலியிலிருந்து பெங்களூரு செல்லும் தோழியர் K. சாந்தா SS அவர்கள் மாநில சங்கத்திற்கு ரூ.1500/ம், மாவட்ட சங்கத்திற்கு ரூ.1500/ம் நன்கொடையை அளித்து தங்களது சங்க அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர். தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், நன்றியையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறது.
-
No comments:
Post a Comment