7 வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் சிறப்புக்கூட்டம்
சிதம்பரம்.05.02.2016.
காலை 09.00 மணிக்கு வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் தோழர் K.நாவு தலைமையில் நடைபெற்றது. தோழர் R.செல்வம் மாவட்ட தலைவர் துவக்கவுரையாற்றினார். தோழர் இரா.ஸ்ரீதர் மாவட்ட செயலர் தேர்தல் விதிமுறைகள் மற்றும் நாம் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை பற்றியும் கடந்த நாள் வரை நாம் அடைந்த பல நஷ்டம் பற்றியும் புதுவையில் நடைபெற்ற புன்னகையுடன் சேவை செய்வோம் கூட்டத்தின் சிறப்பு பற்றியும், 2017 ல் வரவிருக்கின்ற ஊதிய உயர்வு நமக்கு கிடைக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
தோழர்.பட்டாபி உரையில் “நமது முன்னோர்கள்
கடந்து வந்த பாதையை சற்றே நாம் திரும்பி பார்க்க வேண்டும். Triple
assets பற்றி அதை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. குறிப்பாக Tower அதை தனி நிறுவனமாக மாற்றி அமைக்க நிர்வாகம் நினைக்கிறது. OFC அதை BBNL என்ற தனி நிறுவனம் உருவாக்கி நமது கேபிள்கள் தனியார் வசம் ஒப்படைக்க
நிர்வாகம் நினைக்கிறது. அடுத்து
நமது Assets நமக்கு சொந்தமான கட்டிடங்களை தனியாருக்கு விற்றுவிடுவது போன்ற ஆபத்தான
சில நெருக்கடிகளை நமக்கு நிர்வாகம் அளிக்கிறது. அடுத்து
ஊதிய மாற்றம் இரண்டு கண்டிஷன் நிர்வாகம் கூறுகிறது. ஒன்று லாபம் இல்லாவிட்டால்
சம்பள உயர்வு இல்லை. இரண்டு நலிவடைந்த நிறுவனமான MTNL,ITI போன்ற
நிறுவனங்களை BSNL டன் இணைப்பது. இதனால் நமக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பே கிடையாது.
பென்ஷனை ஒழுங்குபடுத்துவது, ஊழியர்களுக்கான கேடர் பெயர் மாற்றம் கண்டுள்ளோம். PLI
உடன்பாடு களையப்பட வேண்டும். ஆகவே நாம் இந்தமுறை முதல் சங்கமாக வர
அனைவரும் பாடுபட்டு வரும் தேர்தலில் பலத்த வெற்றியை பெறவேண்டும்” என்றார்.
கூட்டத்தில் 70 க்கும் மேற்பட்ட தோழர்களும், தோழியர்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment