.

Sunday, February 7, 2016

ஏழாவது உறுப்பினர் சரிபார்ப்பை நோக்கி
தமிழ் மாநில செயற்குழு.....
 
மாநிலத்தலைவர் தோழர் லட்சத்தின் சீர்மிகு தலைமையில், தோழர் குடந்தை ஜெயபாலின் உணர்ச்சிமிகு துவக்கவுரையுடன் துவங்கிய மாநில செயற்குழு ஏழாவது உறுப்பினர் சரிபார்ப்பினை தமிழ் மாநிலத்தில் வெற்றிகரமாக சந்திப்பதை பற்றியே திட்டமிட்டது.
தோழர் பட்டாபியின் ஆய்படுபொருள் அறிமுக உரை, மாவட்டவாரியாக ஊழியர்கள் எண்ணிக்கை, சங்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளில் நம் சங்கம் சாதித்தவை, அதற்கு முன்னர் இழந்தவை, இவையனைத்தையும் ஊழியர் மத்தியில் கொண்டு செல்லல், சரிபார்ப்பில் ஒவ்வொரு மாவட்டச்சங்கமும் ஆற்ற வேண்டிய பங்கு என தெளிவான திசை நோக்கி செயற்குழுவை அழைத்து சென்றது.
தோழர்கள் சேது, S.S.கோபாலகிருஷ்ணன், காமராஜ், தமிழ்மணி, அசோகராஜன் ஆகியோரும் வழிகாட்டினர். தமிழகத்தின் அனைத்து மாவட்டச்செயலர்களும் தங்கள் மாவட்டங்கள் உறுப்பினர் சரிபார்ப்பை சந்தித்த, சந்திக்க உள்ள வழிமுறைகளை பகிர்ந்து கொண்டது மட்டுமின்றி, அடுத்து வரும் சரிபார்ப்பிலும் தமிழகத்தில் நமது சங்கத்தை முதன்மை சங்கமாக கொண்டுவர உறுதி பூண்டனர். மாநில சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தோழர் ஆர்.கே-வின் எழுச்சிமிகு நிறைவுரை முதன்மை சங்கமாக நம் சங்கம் மிளிர ஆற்றவேண்டிய கடமைகள் நோக்கி நம்மை கொண்டு சென்றது.
பணி ஓய்வு பெற்ற தூத்துக்குடி தோழர் பாலு பாராட்டப்பட்டார். வரவேற்புக்குழு பொதுச்செயலர் தோழர் நெடுமாறன் மாநாட்டிற்கான தயாரிப்புகள் மற்றும் தேவைகள் குறித்து விளக்கினார். வரவேற்புக்குழு அமைக்கப்பட்ட அன்று ஒரு மாத ஓய்வூதியத்தை வரவேற்புக்குழுவிற்கு நன்கொடையாக அறிவித்து ரூபாய் 1000-ம் அளித்த தோழர் லட்சம், தனது ஒரு மாத ஓய்வூதியத்தின் மீதத்தொகையான ரூபாய் 24000-த்தை தோழர் நெடுமாறனிடம் அளித்தார். மாவட்ட சங்கங்களும் நிதியளித்தன. தோழர் முரளி நன்றி கூற, மாநில செயற்குழு நிறைவுற்று, உறுப்பினர் சரிபார்ப்பிற்கான பணிகள் துவங்கின.
நமது மாவட்டத்திலிருந்து மாவட்ட செயலர் தோழர். இரா.ஸ்ரீதர், மாநிலத்துணைத் தலைவர் தோழர்.லோகநாதன் உள்ளிட்ட சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

மாநில மாநாட்டிற்கான நமது  பங்கை நாம் இன்னும் அளிக்கவில்லை. ஆகவே மாவட்ட,கிளைச்சங்க நிர்வாகிகள் உடனடியாக தோழர்களிடம் நேரில் சென்று வசூலித்து மாவட்டசங்கத்திடம் செலுத்தி உங்களது வர்க்க கடமையை செலுத்துமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.



No comments:

Post a Comment