பாட்னாவில் நடைபெற்ற
தேசிய கவுன்சில் கூட்டத்தின்
வரைவுத்
தீர்மானங்கள்
ஊதிய மாற்றம்
பாட்னாவில் மார்ச் 1 மற்றும் 2 தேதிகளில் நடந்த விரிவடைந்த தேசிய செயற்குழுக்கூட்டம்
பொதுத்துறை நிறுவனங்களில் ஊதியம் மாற்றம் குறித்த 8 வது இருதரப்பு
பேச்சுவார்த்தையை உடனடியாகத் துவக்குமாறு இந்திய அரசாங்கத்தையும் (உரிய வழிகாட்டுதல்கள் வழங்க) டிபிஇ இலாகாவையும் வற்புறுத்துகிறது.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் பெறும் நிறுவனங்களுக்கு டிபிஇ தனது
இரண்டாம் பகுதி வழிகாட்டுதல்களை முன்பே வழங்கிவிட்டது. முன்பிருந்த அரசாங்கம் 10
ஆண்டுகளுக்குக் குறைவான காலத்தில்—அதாவது 2017
க்கு முன் என -- ஊதிய மாற்றத்திற்கு உறுதி அளித்துள்ளதால்
டிபிஇ மேலும் தாமதமின்றி தனது வழிகாட்டுதல்களை வெளியிட வற்புறுத்துகிறது,
CDA விலிருந்து IDA விற்கு ஊதிய மாற்றம் நிகழ்ந்த முதலாவது ஊதிய மாற்றப் பேச்சுவார்த்தையின் போது NFTE அனைத்து சங்கங்களையும் ஓன்றிணைத்து பேச்சு வார்த்தையில் அனைவரையும் சம பங்குதாரர் ஆக்கி, ஒரு நல்ல ஊதிய மாற்றத்தை உறுதி செய்தது. அது மட்டுமின்றி ஊதிய தேக்கம், செயற்பாட்டு அடிப்படையிலான போனஸ் , 68.8 லிருந்து 78.2 என இரண்டாவது 2007 ஊதிய உடன்பாட்டினால் எழுந்த அனைத்து பிரச்சனைகளிலும் N F T E தொடர்ந்து போராடி வருகிறது.
அனைத்து ஊழியர்களின் எதிர்காலத்திற்கு
எதிர்வரும் ஊதிய மாற்றுப் பேச்சுவார்த்தை மிக மிக முக்கியமானதென
NFTE கருதுகிறது . D
O T யிலிருந்து BSNL
ல் இணைத்துக் கொண்ட அநேக பெரும்பான்மை ஊழியர்களுக்கு இது கடைசி ஊதிய
மாற்றமாக இருக்கும். இந்த பேச்சு வார்த்தையில் வெற்றி பெற NFTE உச்சபட்ச பேரம் பேசும்
உரிமையுடைய ( bargaining strength) சங்கமாகத் திகழ்வது அவசியமானதாகும். ஏனைய சங்கங்களுக்கும் ஊழியர்களுக்கும்
NFTE உறுதியளிப்பது யாதெனில், முதன்மை அங்கீகாரம்
பெற்ற நிலையில் NFTE சங்கம் ,
·
அனைவரும் பங்கு பெறும் உச்சபட்ச
பேர உரிமையுடைய, பரந்து
பட்ட, சம்பள மாற்றக்
குழு அமைந்திட NFTE களத்தில் முன்நின்று பாடுபடும் !
·
அதன் பலனாய் ஒரு நல்ல மதிப்பு
மிக்க,
சமச்சீரான ஊதிய மாற்றத்தை அனைவருக்கும் உறுதி செய்ய , பென்ஷன் பாதுகாப்போடு , உடன்பாடு கண்டு சாதிக்கும்
!
P L I போனஸ்
லாபத்தோடு
இணைந்த போனஸ் பார்முலாவை மாற்ற P L I கமிட்டியில் இடம் பெற்றுள்ள
NFTE பிரதிநிதிகள் எடுத்து வரும் முயற்சிகளை, ஒரு
நியாயமான குறைந்தபட்ச அளவீடுகளுக்காக தொடர்ந்து நடத்தி வரும் போராட்டத்தை விரிவடைந்த
பாட்னா தேசிய செயற்குழுக் கூட்டம் பாராட்டுகிறது. ஒரு புதிய பார்முலா கொண்டு வருவது
தாமதிக்கப்படுவதால் இடைக்கால அட்ஹாக் போனஸ் என்ற கோரிக்கையை NFTE எழுப்பியது. அது அதிகாரிகள் சிபார்சு குழுவின் ஒப்புதலையும்
பெற்றுள்ளது.. போனஸ் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும்,
போனஸ் உரிமையை மீண்டும் பெறுவதற்கும், போனஸ் பெறும்
வரை ஓயமாட்டோம் எனவும் தேசிய செயற்குழு ஊழியர்களுக்கு உறுதியளிக்கிறது.
பெயர்
மாற்றக்குழு உடன்பாட்டின் அடிப்படையில் கேடர்களில் பெயர் மாற்றத்திற்கான உரிய உத்தரவுகளை
நிர்வாகம் விரைவில் வெளியிட வேண்டும் என பாட்னா தேசிய செயற்குழு கோருகிறது.
வீட்டு வாடகைப்படி 78
.2 சதவீதத்தில்
சலுகைகளை
மீட்கவும் படிகளை உயர்த்திடவும் NFTE தொடர்ந்து போராடி வருகிறது
. படிகளில் எந்தவொரு மாற்றத்திற்கும் நிர்வாகம் ஒப்புக்கொள்ள மறுக்கும்
நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான படிகளை உயர்த்தி வழங்குவதில் வெற்றி பெற்றோம்.
அதே போன்று 78.2 அடிப்படையில் வீட்டு வாடகைப்படி மறுக்கப்படும் அநீதியைக் களையவும்,
அதனை விரைவில் பெறவும் தேசிய செயற்குழு ஊழியர்களுக்கு உறுதியளிக்கிறது.
S C / S T ஊழியர் பிரச்சனை
பாராளுமன்ற
குழு மற்றும் லோக் சபா செயலகத்தின் கவனத்திற்கு இரண்டு விஷயங்களை NFTE கொண்டு சென்றது. ஓன்று , (நாலு
கட்ட பதவி உயர்வு திட்டமான) NEPP ல் S C / S T ஊழியர்களுக்கு சேவை ஆண்டுகளைக் குறைத்து சலுகை காட்டுவது. மற்றொன்று , S C / S T பிரிவு குடும்பத்தினருக்கான பரிவு அடிப்படை பணி தருவதில் ஏழ்மை மதிப்பீட்டு
அளவுகோல்களில் சலுகை காட்டுவது. S
C / S T பிரிவினனருக்கு சலுகைகளை உறுதி செய்வதில் NFTE ஆகச் சிறந்த தனது அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்யும் என உறுதியளிக்கிறது.
நேரடி நியமனம் பெற்ற ஊழியர்கள்
இவர்கள்
மீது NFTE தொடர்ந்து கவனம் செலுத்தி வருவது மட்டுமல்ல சில பிரச்சனைகளைத்
தீர்த்துள்ளது. LICC தேர்வுகள் நடத்துவது உறுதிபடுத்தப்பட்டு முறைப்படுத்தப் பட்டுள்ளது. J T O /
J A O தேர்வு எழுதத் தகுதி ஆண்டுகள் 5 ஆகக்
குறைக்கப்பட்டுள்ளது. 2007 ஊதிய மாற்ற அடிப்படையில் ஸ்டைபண்டு
விகிதம் உயர்த்தப்பட்டது. 1 – 1 –
2007 க்குப் பின் பணியில் சேர்ந்த TTA ஊழியர்களுக்கு
ஊதிய மாற்றத்தால் ஏற்பட்ட ஊதிய இழப்பைக் கூடுதல் ஆண்டுயர்வுத் தொகை வழங்கச் செய்து
போக்கினோம், நிலுவைத் தொகை பெறச் செய்தோம். இதே போன்ற ஏனைய கேடர்களுக்கான பாதிப்பை நீக்க முயற்சிகள் தொடர்கின்றன. J E என பெயர் மாற்றப் பிரச்சனைக்கு
உடன்பாடு எட்டப்பட்டு விட்டது. உத்தரவுகள் வெளியாக வேண்டும்..
D P E வழிகாட்டுதல்கள்படி ஓய்வூதியப்பலன்கள் அளிக்கப்பட பேச்சுவார்த்தைகள்
தொடர்கின்றன. நிர்வாகம்
கடுமையான நிலை எடுத்துள்ளது என்றாலும் நாம் கோரிக்கையில் வெல்வோம். விடுமுறையைக் காசாக்குதல் பிரச்சனை
தீர்க்கப்பட வேண்டும்.
இளைய
B S N L ஊழியர்களின் நலன்கள்
பாதுகாக்கப்படும் என்பதற்கு NFTE உறுதியளிக்கிறது. இதற்கென NFTE தொடர்ந்து வாதாடும், தேவையெனில் போராடும்.
கட்டாயப் பணி ஓய்வு 55
ii b
பணி
பாதுகாப்பிற்காகத் தொடர்ந்து NFTE போராடி வருகிறது. BSNL – ல் இணையும் போது C D A விதி 55 ii b பொருந்தாது என்பதைப் போராடி உறுதி செய்தது. விதி 55 ii C என்பது B S N L –ல் இணைந்த ஊழியர்களுக்குப் பொருந்தாதபோது
அதன் மறுதலையான 55 ii b விதியும் கூட பொருந்தாது என்பதுதான் சரியாக
இருக்க முடியும். ஆனால் துரதிருஷ்டவசமாக D O T / B S
N L நிர்வாகம் ஊழியர்களை
55 வயதாகும் போதே 55 ii b விதியைப் பயன்படுத்தி
முன்கூட்டியே தாராளமாக ஓய்வில் அனுப்பத் தீவிரமான ஆலோசிக்கிறது. இது ஊழியர்களுக்கெதிரே இருக்கும் -- அவர்களது எதிர்காலத்தைக்
கடுமையாக பாதிக்கும் -- மிகப்பெரிய ஆபத்தாகும். இது ஊழியர்களின் ஐந்தாண்டு சம்பளத்தைப் பறிப்பதும் அவர்களுக்கு உரிமையான உரிய
பென்ஷனை மறுப்பதும் ஆகும்.. கட்டாய ஓய்வு என்பதை முன்கூட்டியே ஓய்வு என்ற பெயரில் கொண்டு வர நினைக்கும்
இந்த பேராபத்தைப் போராடித் தடுத்து நிறுத்த அனைத்து சங்கங்களையும் NFTE அறைகூவி அழைக்கிறது.
பென்ஷன்
பென்ஷன்
பிரச்சனையில் NFTE விடாப்பிடியான ஒரு தொடர் போராளியாகத் திகழ்கிறது. ஆகப் பெரிய தலைவர் ஓம் பிரகாஷ் குப்தாவின்
தலைமையில் NFTE போராடி “அரசுப் பென்ஷன்
அதுவும் அரசின் கன்சாலிடேட் நிதியிலிருந்து C D A ஊதிய விகிதத்தில்
பென்ஷன்” என்பதை உறுதிசெய்த பின்பே B S N L -- ல் இணைய ஒப்புக் கொண்டோம்.
2006 ம் ஆண்டுகளில் 60 சதவீதம் பொறுப்பேற்றல் என்ற கண்டிஷனைச் சேர்த்த மோசடியான சதித்திட்டத்தை வெளிக்
கொணர்ந்த முதல் சங்கம் NFTE ஆகும். அதனை எதிர்த்துத் தொடர்ந்து போராடி
வருகிறது. 2007 ஊதிய
மாற்றத்திற்குப் பின் பென்ஷனிலும் மாறுதல் காணப் போராடியது NFTE யே. 78 .2 பென்ஷனுக்காக போராடிவரும் NFTE சங்கம் எதிர்கால பென்ஷன் மாற்றத்திற்கும் போராடும் என்பதை உறுதியோடு பிரகடனம்
செய்கிறது.
பென்ஷன்
பிரச்சனையில் NFTE சங்கம் பாரதப் பிரதமருக்கு அளித்த விவரமான
குறிப்பு பிரதமர் அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்கு மனுவாக ஏற்கப்பட்டுள்ளது.. அனைத்து ஊழியர்களுக்கும் பென்ஷன்
தொடர்பான பிரச்சனைகளில் NFTE சங்கம் தொடர் கண்காணிப்பைச் செலுத்தும்
என்பதற்கு உறுதியளிக்கிறது.
இந்திய
அரசாங்கம் விரைவில் 78 .2 அடிப்படையில் பென்ஷன் என்பதற்கான தனது
ஒப்புதலைத் தர வேண்டும் எனவும் 60 சதவீத பொறுப்பேற்றல் என்று
புகுத்திய புதிய கண்டிஷனை விலக்கிக் கொள்ள வேண்டும் எனவும் விரிவடைந்த பாட்னா தேசிய
செயற்குழுக் கூட்டம் இந்திய அரசை வற்புறுத்திக் கோருகிறது.
டெலாய்ட்டு கமிட்டி
டெலாய்ட்டு
கமிட்டியின் நடைமுறை சாத்தியமற்ற பரிந்துரைகளை விரிவடைந்த பாட்னா தேசிய செயற்குழுக்
கூட்டம் முற்றாக நிராகரிக்கிறது. நமது பரந்து விரிந்த ஆதார கட்டமைப்பு
வலைப்பின்னலைச் சிதைக்கும் நோக்கமுடையதாகவும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பக் குடும்பத்திலிருந்து
B S N L ஐ வெளியேற்றும் வகையிலும்
கமிட்டியின் பரிந்துரைகள் உள்ளன. உதாரணத்திற்கு சந்தை நடைமுறைக்கேற்ப
மனித ஆற்றலை மறுவரையறைக்கு உட்படுத்துவது, வாடிக்கையாளர் சேவை
மைய வேலைகள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தும் பணிகளை கான்டிராக்டுக்கு
விடுவது ; திறன்சார் பணியாளர்களைத் தற்காலிக கூலி அடிப்படையில்
பணிக்கு அமர்த்துவது, வியாபாரப் பகுதி என்ற வகையில் தொலைத்தொடர்பு
மாவட்டSSAஎண்ணிக்கைகளைக் குறைப்பது, பராமரிப்பு பகுதிகளில் அவட்சோர்சிங் முறையை கையாளுவது, கூடுதல் ஊழியர்கள் சம்பளத்திற்கு அரசின் ஆதரவு உதவியைக் கோருதல் போன்ற சிலபரிந்துரைகளை
போர்டு ஓப்புதல் அளித்துள்ளது. இவற்றில் சில அமுலாகவும் தொடங்கி விட்டன. அரசிடமிருந்து ஊழியர்கள் சம்பளத்திற்கு
ஆதரவு உதவியை ஏற்பது என்பது நமது எதிர்கால ஊதிய மாற்ற பேச்சுவார்த்தைகளைக் கடுமையாக
பாதிக்கும். NFTE தன்னால்
முடிந்த வகையில் ஊழியர்களின் மாற்றல்கள் அந்தந்த மாவட்ட SSA எல்லைக்குள்ளே
அமையும் உபரி ஊழியர்கள் மாவட்டத்திற்குள்ளேயே பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள் என்ற
உறுதி மொழியைப் பெற்றிருக்கிறது, ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி
செய்ய NFTE பல்லாற்றானும்
போராடும் என்ற உறுதியை தேசிய செயற்குழு உறுதிபடத் தெரிவிக்கிறது.
டவர் கம்பெனி
தனியே
டவர் கம்பெனி அமைப்பது என்ற K P M G –ன்
பரிந்துரை கொள்கையளவில் மந்திரிசபையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது, இதனைச் செயல்படுத்த அமைச்சகங்களுக்கிடையேயான
அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு விட்டது.
பென்ஷன் இலாக்கா பிரதிநிதியும், சம்பந்தப்பட்ட
அனைத்துத் தரப்பினரும் இடம் பெற வேண்டும் என நாம் வற்புறுத்தியதன் அடிப்படையில் B
S N L பிரதிநிதியும் குழுவில்
சேர்க்கப்பட்டுள்ளனர்.
தனியே
பிய்த்தெடுத்து டவர் கம்பெனி அமைக்கும் முடிவானது B S N L நிறுவனத்தின் நிதி ஆதாரத்தை,
அதன் சந்தை வணிக நடவடிக்கைகளை மேலும் கடுமையாகப் பாதிக்கும் என பாட்னா
தேசிய செயற்குழு கவலையோடு சுட்டிக்காட்டுகிறது.. அப்படியே டவர் கம்பெனி நம் மீது திணிக்கப்பட்டாலும்
நெடும் போராட்டங்களால் வென்றெடுக்கப்பட்ட ஊழியர்களின் உரிமையான பென்ஷன் மற்றும் ஊழியர்
நலன்களைப் பாதுகாப்பதில் NFTE முன்நின்று போராடும்.
தனியே
டவர் கம்பெனி அமைக்கும் யோசனையைக் கைவிடுமாறு மத்திய அரசிடம் NFTE வேண்டுகோள் விடுக்கிறது. B S N L
நிர்வாகம் டவர்களைத் தன்னிடமே வைத்துக் கொள்வதன் மூலம் அது சார்ந்த
வணிகத்தை மேம்படுத்த தனக்குள்ள வாய்ப்புகளைப் பரிசீலிக்க வேண்டுகிறது.
M T
N L இணைப்பு
முந்தைய பல அமர்வுகளில்
NFTE எடுத்த தீர்மானத்தை பாட்னா தேசிய செயற்குழு மீண்டும் வற்புறுத்துகிறது.
M T N L இணைப்பு
பிரச்சனையில் இந்திய அரசாங்கம் வெளிப்படையாக இல்லை.. D O T யும்
பெங்களூரு I I M மேலாண்மை
நிறுவனத்தின் சிபார்சுகளின் நகலை (வணிக ரகசியம் காப்பது என்று
காரணம் காட்டி) நமக்கு தர மறுக்கிறது. இணைப்பின் காரணமாக எழும் நிறுவன நிதி
ஸ்திரத்தன்மை பிரச்சனை மற்றும் ஊழியர் பிரச்சனைகள் வெளிப்படையாக விவாதிக்க மறுப்பது
தொழில் அமைதியை பாதிக்கும் என எச்சரிக்கிறோம். அனைத்து சங்கங்களையும் இப்பிரச்சனையில்
விழிப்புடன் இருக்கவும் பொதுத் துறையான நமது B S N L நிறுவனத்தைப்
பாதுகாக்கவும் அறைகூவி அழைக்கிறது,
அனைத்து
ஊழியர்களுக்கும் நமது தோழமை வேண்டுகோள்
2016 மே மாதம் 10 ம் தேதி உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல்
நடைபெற உள்ளது.. தேர்தலை
ஒட்டி ஊழியர்களின் சிந்தனைக்கு சிலவற்றை முன் வைக்க விரும்புகிறோம். நமது பிரச்சாரம் ஆக்க பூர்வமானதாக
– ஆரோக்கியமானதாக -- நமது விவாதங்கள் பிரச்சனைகளின்
அடியாழத்தைப் புரிந்து கொண்டதாக – நம்மைச் சுற்றியுள்ள சவால்களை
நமது கடமைகளை புரிந்து கொண்டதாக --ஊழியர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும்
நோக்கத்தில் அமையட்டும்.
ஒவ்வொரு
தொழிலாளியும் இந்தத் தேர்தலில் NFTE --ஐ ஆதரிக்க வேண்டும் என்ற
ஆர்வமிக்க வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம். முதன்மைச் சங்கமாக உங்கள் பிரச்சனைகளை
வலுவாக முன்னெடுத்துச் செல்ல உங்கள் மதிப்பு மிக்க வாக்குகளை NFTE ன் இணைந்த கரங்கள் சின்னத்திற்குத் தாருங்கள். அத்தகைய
ஒரு நல்ல முடிவை எடுக்க NFTE ன் கடந்த கால சாதனைகள்,
NFTE ன் நெடிய அனுபவம்,
அதன் தியாகம் உங்கள் முன் வரிசையாய் உள்ளன. லட்சக்கணக்கான தற்காலிகப் பணியாளர்கள்
நிரந்தரம் பெற்றது, லட்சக் கணக்கானோர் பதவி உயர்வு பெற்றது,
கேடர் சீரமைப்பு மூலம் மேம்பாடு அடைந்தது, ஆண்டு
தோறும் உயர்ந்து கிடைத்து வந்த போனஸ், குறிப்பாக கார்பரேஷனாக
மாறும் போது அரசு பென்ஷனை உறுதி செய்த தலைமையின் தொலை நோக்குப் பார்வை என சாதனைகள்
ஏராளம்.
மத்திய
சங்கம் அங்கீகாரம் பெற்றிருந்த துவக்க காலத்தில் NFTE தீர்த்து
வைத்த பிரச்சனைகளின் பட்டியல் அடங்கிய சாதனை கையேட்டைப் படித்துணர்ந்து செயல்படத் தோழமையுடன்
உங்களை வேண்டுகிறோம் !
, ஊழியர்களுக்கான
எதிர்காலக் கடமைகளை -- ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் நலம் காப்பதில்
– உங்களின் பேராதரவோடு NFTE முதன்மைச் சங்கமாக
தேர்வு பெற்று NFTE சங்கம் முன்நிற்கும் என உறுதி கூறுகிறோம்
வாக்களிப்பீர்
NFTE ன் இணைந்த கரங்கள் சின்னத்தில் !
தகவல் பலகைக்கு/நகலை உறுப்பினர் ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்கவும்
தகவல் பலகைக்கு/நகலை உறுப்பினர் ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்கவும்
No comments:
Post a Comment