.

Friday, March 25, 2016

விழுப்புரம் தேர்தல் பிரச்சாரச் சிறப்புக் கூட்டம்

23-03-2016 மாலை விழுப்புரம் தொலைபேசி நிலையத்தில் 7-வது சரிபார்ப்புத் தேர்தல் பிரச்சாரச் சிறப்புக் கூட்டம் NFTE மாவட்டத் தலைவர் தோழர் ஆர்.செல்வம் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. NFTE சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் நமது மரியாதைக்குரிய தோழர் இஸ்லாம் அகமது அவர்கள் சிறப்புரையாற்றினார். கூட்டணித் தோழமைச் சங்கங்களான SEWA மாவட்டச் செயலர் தோழர் எஸ்.வாசுதேவன், PEWA சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் வி, நல்ல தம்பி உரையாற்றினர்.
     விழுப்புரம் NFTE கிளைச் செயலர் தோழர் ஜி.கணேசன் அனைவரையும் வரவேற்றார்மாநிலப் பொருளாளர் அன்பிற்கினிய தோழர் கே.அசோகராஜன் சிறப்பான துவக்கவுரையாற்றினார்கடலூர் முன்னாள் மாவட்டச் செயலர் தோழர் பி.சுந்தரமூர்த்தி, மாவட்ட உதவி செயலர் தோழர் குழந்தைநாதன், மாநில நிர்வாகிகள் தோழர் என்.அன்பழகன், வி,லோகநாதன், திருச்சி மனோகர் கருத்துரை ஆற்றினர்.
     NFTE அனைத்திந்தியச் செயலர் தோழர் ஜி. ஜெயராமன் அவர்கள் தமது சிறப்புரையில் தனித்த அங்கீகாரத்துடன் BSNLEU சங்கத்தின் 8 ஆண்டுகாலத்தில் ஊழியர்கள் அடைந்த இழப்புகளைப் பட்டியலிட்டு அதன் வேதனையும் NFTE சங்கம் அங்கீகாரத்தைப் பகிர்ந்தபின் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் NFTE சங்கத்தால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் விளக்கிக் கூறினார்ஓய்வூதியதாரர்கள் உள்பட அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வு NFTE கூட்டணி பெறப்போகும் மாபெரும் வெற்றியில் தான் உள்ளதுஅதற்கென ஒன்றுபட்டு உழைப்போம் என்று உற்சாக மூட்டினார்.
     புதுவை மாவட்டச் செயலர் தோழர் எம்.செல்வரங்கம் BSNLEU சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் அபிமன்யு கூட்டத்தில் கூறிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கடலூர் மாவட்டச் செயலர் தோழர் இரா. ஸ்ரீதர் தோழர் இஸ்லாம் அவர்களுக்கு கடலூர் மாவட்டத் தோழர்களின் அன்பினைக் கூறி, மற்றவர்கள் நம்பிக்கையின்மையை விதைத்துக் கொண்டிருந்த போது  சொன்னபடி வெள்ளநிவாரண முன்பணம் பெற்றுத் தந்த தலைவனுக்கு நன்றியைக் கூறி வரவேற்றார்.  2004 முதல் 2013 வரை BSNLEU சங்கம் தனித்த அங்கீகாரத்துடன் இருந்தபோது அவர்களால் புதிதாக எதையும் சாதிக்க முடியவில்லை என்பதோடு ஊழியர்களின் ஒன்றுபட்ட போராட்டங்களால் முன்பு நாம் பெற்ற உரிமைகளையும் ஒவ்வொன்றாக இழந்ததையும் எடுத்துக்கூறினார். 2000 ல் தோழர் குப்தா அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்துப் பெற்ற ஊதிய மாற்றத்தின் தன்மையையும் 2007 ல் தான்மட்டுமே என BSNLEU சங்கம் தனித்து நம்மீது திணித்த சம்பள மாற்றத்தினால் ஏற்பட்ட மைனஸ் ஊதியம் என வாங்கிய சம்பளத்தில் பிடித்தம், ஊதிய தேக்கம் மேலும் NLC ல் 5 ஆண்டுகளில் ஊதிய மாற்ற ஒப்பந்தம் என்ற முன்னுதாரணம் இருந்தபோதும் 10 ஆண்டுகளுக்குப் பிறகே ஊதிய மாற்றம் பெற்றது, என்ற அவர்களின் இயலாத போக்கை விவரித்தார்இந்த தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க 2017 ல் நல்லதொரு ஊதிய மாற்றம் பெற NFTE சங்கம் முதன்மைச் சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் நன்கொடையாக ரூபாய் 300/= உடனடியாக வழங்க வேண்டும் என்ற கடமையை நினைவூட்டினார்,
    
அனைத்திந்தியத் தலைவர் தோழர் இஸ்லாம் அவர்களின் மென்மையான ஆனால் அழுத்தமான உரையை அனைத்திந்திய சிறப்பு அழைப்பாளர் புதுவைத்தோழர் பி.காமராஜ் தமிழில் மொழிபெயர்த்தார், ( உரை சுருக்கம் பின்னர்)
     மாவட்டச் செயலர், தோழர் இஸ்லாம் அவர்களுக்குப் போர்த்திய பொன்னாடையை வழங்கிய விழுப்புரம் தோழர் சங்கரன் அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் நன்றி.
     கூட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த விழுப்புரம் கிளைத் தோழர்களுக்கு பாராட்டுகள்.
     இறுதியாக அரகண்டநல்லூர் கிளைச் செயலாளர் தோழர் பி. பழனிவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்மாவட்டத்தின் பல கிளைகளிலிருந்து வேன் ஏற்பாடு செய்து பெருமளவில் கலந்து கொண்ட தோழர்களுக்குப் பாராட்டுகள்.
     சிறப்பான நன்றிக்குரியவர் நமது அன்பிற்குரிய கடலூர் கிளையின் மூத்த உறுப்பினர்நாம் தாமதமாக முடிவு செய்து கூறினாலும், மிகச் சிறப்பான சுவையான இரவு உணவிற்கு ஏற்பாடு செய்து வழங்கியவர் கடலூர் முன்னணித் தோழர் A. விஸ்வநாதன், Sales Associate ஆவார்உணவுக்கான முழுச் செலவையும் தாமே ஏற்றுக்கொண்டு வழங்கினார் என்பது கூடுதல் சிறப்புக்குரியதுகடலூர் மூத்த தோழர் A. விஸ்வநாதன் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி!

     மே தினத்தின் உள்ள உறுதி, உற்சாகத்தோடு
மே 10 நோக்கி

ஒன்றாய் உழைப்போம், ஒன்றாய் வெல்வோம் !








     

No comments:

Post a Comment