.

Monday, March 28, 2016


தோழர் இஸ்லாம் உரை
( நிறைவுப் பகுதி)

பதவிஉயர்வு திட்டத்தில் உள்ள பாதகங்களை நாம் பலமுறை சுட்டிக்காட்டினோம். அதிகாரிகளுக்கு உள்ளதுபோல 2004 லிருந்து  இல்லாமல் 2008 ல் வெறும் 4 பதவிஉயர்வு பெற்றது. நாம் குறைகளை/  பாதகங்களை சுட்டி காட்டிய பொழுதெல்லாம் மிகச் சிறந்த பதவிஉயர்வு எனப் பேசி வந்த BSNLEU  தற்பொழுது புதிய பதவிஉயர்வு திட்டம் கோரிஉள்ளது.
CRS 55ii b கட்டாயப் பணிஓய்வு என்பது BSNLEU  அங்கீகாரகாலத்தில் 2006 CDA விதிகளில் திணிக்கபட்டு இன்று 55 வயது முடித்தவர்களை வீட்டுக்கு அனுப்பிடும் அதிகாரம் நிர்வாகத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் 55ii C அடிபடையில் DOT ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யமுடியாது என 2000 ஆண்டு வேலை நிறுத்த உடன்பாட்டின் மூலம் பணிபாதுகாப்பு பெற்றுள்ளோம். 2000ல் போராடாதவர்களுக்கு இந்த பாதுகாப்பு தெரியாது. நாம் உறுதியாக இருக்கிறோம்ஊழியர்களின் பணியை நிச்சயம் பாதுகாப்போம்.
பொதுத்துறை மாற்றம் என அரசு முடிவு எடுத்த பொழுது, ஊழியர்கள் நலன் காத்திட நாம் போராட்டம் செய்தோம். ஆனால் இன்று கேபினட் டவர் நிறுவனம் அமைத்திட முடிவு எடுத்த பின்னர் அரசு முடிவை மாற்றிட BSNLEU போராடவில்லை,  வேலைநிறுத்தம் ஏதும் செய்யவில்லை. மாறாக ஊழியர்களின் பணிபாதுகாப்பு, அரசுபென்ஷன் உத்திரவாதம் உண்டா? என தெளிவு படுத்திடவேண்டும் எனக் கோரி வருகிறோம் என்கிறார்கள். BBNL அமைக்கபட்ட பின்னரும் BSNLEU  ஏதும் செய்யவில்லை. ஆனால் தனது தோல்விக்குப் பொதுதுறை மாற்றத்தைக் கை காட்டுகிறது.
MTNL / BSNL இணைப்புக்குமுன் அதன் ரூ16000 கோடி கடனை அரசு ஏற்க வேண்டும். நிதி உதவி செய்யவேண்டும். மேலும் ஊழியர்கள் பிரச்சனை, பதவிஉயர்வு, ஊதியநிலை, CGA என பல பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்.
8 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட / தாமதிக்கப்பட்ட கேடர் பெயர் மாற்றம்TTA க்கு JE என்ற பெயர் மாற்றத்தை  BSNLEU  ஏற்க மறுத்தது. நாம் அங்கீகாரம் பெற்றபின்  அனைத்து கேடருக்கும் இன்று தீர்வு பெறப்பட்டுள்ளது.
அனைத்து கேடருக்கும் ஆளடுப்பு விதிகளில் மாற்றம் செய்து தேர்வுகள் நடத்திடக் கோரினோம். 2013ல் தேர்வுகளும் நடத்தப்பட்டுள்ளது.
BB  சேவையை தனியாருக்கு விட அனுமதிக்கக் கூடாது என போராடி வருகிறோம். ஊழியர்களின் திறன் உயர்த்தி BB சேவையையை மேம்படுத்திடக் கோரி வருகிறோம்.
SC/ST ஊழியர்களின் சலுகை பதவி உயர்வில் மறுக்கப்பட்டாலும், நாம் தொடர்ந்து பாராளுமன்ற நிலைக்குழுக்குப் பிரச்சனையைக் கொண்டு சென்றுள்ளோம்
மகளிருக்கு CCL மத்திய அரசுத் துறைகளில் 2008 ம்ஆண்டே அமலாகி விட்டது. ஆனால் நமது பிரிவு மகளிருக்கு 2013-ல் நாம் அங்கீகாரம் பெற்றபின்தான்  உத்திரவாக பெற முடிந்தது. பல்லாயிரம் தோழியர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர். மாற்றலில் மகளிருக்குச்  சிறப்பு சலுகை பெறப்பட்டுள்ளது.
இதர ஊழியர் பிரச்சனைகளையும் தொட்டுக்காட்டி ஊழியர் நலம் மேம்பட BSNL வளம்பெற நமது NFTE சங்கம் முதன்மைச் சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கென நீங்கள் ஒன்றுபட்டு கடுமையாக உழைக்க வேண்டும் என மீண்டும் நமது கடமையை நினைவூட்டி உரையை நிறைவு செய்தார். தோழர் இஸ்லாம் அவர்களின் தமிழ் மாநில சுற்றுபயணம்  உணர்வூட்டுவதாக நமக்கு உற்சாகம் ஊட்டுவதாக மிக சிறப்பாக அமைந்திருந்தது.

No comments:

Post a Comment