.

Monday, March 28, 2016


அஞ்சலி

                     நமது மாநில சங்க அலுவலகக் காப்பாளராக பணிபுரிந்த தோழர் N. கார்த்தி நேற்று (27.3.2016) அகால மரணமடைந்தார். அவரது மறைவிற்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

இன்று 28.3.2016 காலை தோழரது இறுதி அஞ்சலி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் AITUC  மாநில செயலர் தோழர் T.M.மூர்த்தி, AITUC மாநிலப்பொருளர் தோழர் ராதாகிருஷ்ணன், கட்டிட தொழிலாளர்கள் சங்க மாநில செயலர் தோழர் ரவி, நமது சங்கத்தின் சார்பில் மாநில செயலர் தோழர் பட்டாபி, மூத்தத்தோழர் ஆர்.கே, தோழர் சேது, மாநில உதவிசெயலர்கள் தோழர் சென்னக்கேசவன், தோழர் முரளி, காரைக்குடி மாவட்ட செயலர் தோழர் மாரி, காரைக்குடி தோழர் முருகன், ராஜபாளையம் தோழர் ஜெயப்பிரகாஷ், காரைக்குடி தோழர் தமிழ்மாறன், கடலூர் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், திண்டிவனம் ஜெயச்சந்திரன் மற்றும் தேவகோட்டை ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டு மறைந்த தோழருக்கு அஞ்சலி செலுத்தினர்.


No comments:

Post a Comment